திங்கள், 5 ஆகஸ்ட், 2013

20 ஆண்டுகளாய் நடைபெற்று வரும் CWO இப்தார் ஏற்பாடு!




பரங்கிப்பேட்டை: கிரசண்ட் நல்வாழ்வு சங்கம் (CWO) சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில்  நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி பள்ளிவாசல்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் பரங்கிப்பேட்டை பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பின் போது, பழம்ங்கள், குளிர்பானம் உள்ளிட்ட உணவு வகைகளை நோன்பாளிகளுக்கு வழங்கினர். இச்சங்கம் ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,  அதன்  மூத்த மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ஒருங்கிணைத்து, CWO வளர்ச்சி குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் இதற்காக அனைத்து உறுப்பினர்களையும்  அன்புடன் அழைப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கலந்தாலோசனை செய்வதற்காக எதிர்வரும் புதன்கிழமை 7-ம் தேதியன்று: அசர் தொழுகைக்கு பின்  இப்தார் வரை மினி ஷாதி மஹால் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது. குறித்து விபரம் அறிய முஹம்மது காலித் (9994106609), வஜ'ஹுத்தீன் (9994133741), அபுல்ஹசன் (8220702442) ஆகியோரை முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

சந்தைக்கு போகலாமா..? (NRI ஸ்பெஷல்..!)

தலைப்பினை பார்த்து விட்டு, ...ம். போகலாம் என்று  பங்குச்சந்தைக்கு அழைக்காதீர்கள், பரங்கிப்பேட்டையில் வியாழக்கிழமைகளில் கூடும் வாரச்சந்தையினை உலா வரலாம்..!



































புதன், 31 ஜூலை, 2013

அரசு உதவிக்கு ஏங்கும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கொத்தர் தெருவைச் சேர்ந்தவர் மு.சட்டநாதன். 90 வயதான இவர், 15 வயதிலேயே சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அப்பாவு பிள்ளை, பரமானந்தராயர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
இப்போது இவர் உணவுக்கும், உடைக்கும் பிறரை எதிர்பார்த்து வாழும் நிலையில் உள்ளார். இது குறித்து அவர் கூறியது: "15 வயதிலேயே சுதந்திரப் போராட்ட களத்தில் தலைவர்களின் கட்டளைகளை நிறைவேற்றும் தொண்டனாக களப்பணியாற்றினேன்.
பரங்கிப்பேட்டை மற்றும் அருகில் உள்ள கிராம மக்களிடம் மேடை நாடகம், தெருக்கூத்து மூலம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய வேளையில், போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிவிடுவேன். சுதந்திரப் போராட்ட காலத்தில் என்னுடைய செயல்பாடுகள் குறித்து முதல்வர் மற்றும் கடலூர் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினேன். இதை அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பபட்டது.

அதில் என்னை கெüரவிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அந்த கடிதத்தை அப்போது தவற விட்டுவிட்டேன். அதன்பிறகு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை தியாகிகளுக்கான ஓய்வூதியம் கிடைக்கவில்லை.இந்நிலையில் முதியோர் ஓய்வூதியம் கேட்டு, சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பலனில்லை.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய சட்டநாதன், இப்போது உணவுக்குக் கூட வழி இல்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார். அரசு திட்டங்களின் மூலம் இவருக்கு உதவித்தொகை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.