புதன், 7 ஆகஸ்ட், 2013

கிழக்கு மாகாண சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!




தம்மாம்: சவுதி அரேபியா, கிழக்கு மாகாணம், பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் மாலிமார்  இருப்பிடத்தில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பரங்கிப்பேட்டைவாசிகள் திரளாக கலந்துக் கொண்டார்கள். .

இந்நிகழ்ச்சியின்போது, பிஃத்ராவிற்க்காக அன்றைய தேதிவரை வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் கடந்த 3 மாதங்களில் சதக்காவாக வசூலிக்கப்பட்ட தொகையையும் அறிவிக்கப்பட்டு. பிஃத்ரா மற்றும் சதக்கா வழங்கிய மற்றும் வசூலித்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..

நோன்பு பெருநாள்: ஹிஜ்ரா கமிட்டி..!







பரங்கிப்பேட்டை: ஈகைத்திருநாள் என்றழைக்கப்படும், நோன்பு பெருநாள் இன்று (07.08.2013)  பரங்கிப்பேட்டை நகரில் ஹிஜ்ரா கமிட்டியினரால் கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் நோன்பு நோற்ற இவ்வமைப்பினர் நேற்றோடு ரமலான் மாதத்தினை 29-நாட்களாக பூர்த்தி செய்து இன்று காலை 7.40 மணிக்கு கலிமா நகரில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகைக்கு பின்னர் தமிழில் உரை நிகழ்த்தப்பட்டது. 

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

20 ஆண்டுகளாய் நடைபெற்று வரும் CWO இப்தார் ஏற்பாடு!




பரங்கிப்பேட்டை: கிரசண்ட் நல்வாழ்வு சங்கம் (CWO) சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில்  நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி பள்ளிவாசல்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் பரங்கிப்பேட்டை பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பின் போது, பழம்ங்கள், குளிர்பானம் உள்ளிட்ட உணவு வகைகளை நோன்பாளிகளுக்கு வழங்கினர். இச்சங்கம் ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,  அதன்  மூத்த மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ஒருங்கிணைத்து, CWO வளர்ச்சி குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் இதற்காக அனைத்து உறுப்பினர்களையும்  அன்புடன் அழைப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கலந்தாலோசனை செய்வதற்காக எதிர்வரும் புதன்கிழமை 7-ம் தேதியன்று: அசர் தொழுகைக்கு பின்  இப்தார் வரை மினி ஷாதி மஹால் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது. குறித்து விபரம் அறிய முஹம்மது காலித் (9994106609), வஜ'ஹுத்தீன் (9994133741), அபுல்ஹசன் (8220702442) ஆகியோரை முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.