செவ்வாய், 27 ஜனவரி, 2015

வண்டிக்காரத்தெரு பெண்கள் பள்ளி கட்டிடம் குறித்து...

வண்டிக்காரத் தெருவில் உள்ள பழைய அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல், செடிகள் முளைத்து சேதமடைந்து வருகிறது.
 
சுனாமியின்போது பரங்கிப்பேட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்தன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்த ராஜஸ்தான் அரசு அதிகாரிகள், பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் புதிதாக அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுத்தனர். புதுச்சத்திரம் சாலையில் ராஜஸ்தான் அரசு கட்டிக்கொடுத்த புதிய கட்டிடத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாற்றப்பட்டது. இதனையடுத்து வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அதனால், வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
 
இதுகுறித்த புகாரின்பேரில், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னு வண்டிக்கார தெருவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியை நேரில் பார்வையிட்டார். பயன்படுத்தாமல் உள்ள ஐந்து கட்டிடங்களில், வருவாய் அலுவலகம், சம்மந்தத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த மின்சார அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அலுவலங்கள் ஒரே இடத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மாறுதலாகி சென்ற பிறகு, அதிகாரிகள் அந்த திட்டத்தை கண்டுகொள்ள வில்லை. தற்போது அங்கு நூலகம் மட்டும் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றது.
 
இது குறித்த செய்திகள் நமது MYPNOல் பல முறை இடம் பெற்றுள்ளன.

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நமது MYPNOன் ஆசிரியர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ  கோரிக்கை வைத்ததன் பதிலாக கீழ்க்கண்ட செய்தி அரசிடமிருந்து கிடைக்கப் பெற்றது.

சனி, 24 ஜனவரி, 2015

குவைத்தில் நடைபெற்ற 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா!

குவைத்தில் நடைபெற்ற 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழா!
தமிழக ஆலிம்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு!!
ஏறக்குறைய 5,000 சகோதர, சகோதரிகள் பங்கேற்றனர்!!!
குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்)ஏற்பாடு செய்த 10ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர்மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் ஜனவரி 1, 2015 அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (02.01.2015) அன்று குவைத் சிட்டி பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் கபீர்பெரிய கூடாரத்தில் நடைபெற்றது.  சனிக்கிழமை (03.01.2015) அன்று ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நிறைவு விழா நடைபெற்றது.  அனைத்து நிகழ்ச்சிகளையும் செயலாளர் மல்வலீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி, தமிழக அரபிக்கல்லூரிகள் கூட்மைப்பின் தலைவர் மவ்லவீஓ.எம். அப்துல் காதிர் பாகவீ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவ்விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களுக்கு ‘நபிமொழிக் களஞ்சியம்’, அப்துல் காதர் பாகவீ அவர்களுக்கு ‘சொற்பொழிவுத் திலகம்’, திருமாவளவன் அவர்களுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ மற்றும் ஆளுர் ஷா நவாஸ் அவர்களுக்கு ‘ஆவணப்பட ஆளுநர்’ விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குவைத் இஸ்லாமிய சங்கத்தின் 10ம் ஆண்டு சிறப்பு மலர், மா மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்று அட்டவணை மற்றும் 2015ம் ஆண்டு வருட நாட்காட்டி ஆகியவை வெளியிடப்பட்டன. ‘வாழ்நாள் சமூக சேவையாளர்’ விருதினை டெல்லி பாஷா (எ) அப்துல் காதர் பெற்றுக்கொண்டார்.
மாநாட்டு உரையில் தொல். திருமாவளவன், ‘இந்து மதம் தீண்டத்தகாதோர் என்று எங்களை தள்ளி வைக்கிறது; கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்க மறுக்கிறது; சமூகத்தில் எங்களை புறக்கணிக்கிறது; எங்கள் உரிமைகளை மறுக்கிறது; ஆனால், இஸ்லாம் எங்களை கட்டித் தழுவுகிறது;மசூதிக்குள் எங்களை அனுமதிக்கிறது; ஒன்றாகச் சேர்ந்து வழிபாடு நடத்த ஆர்வமூட்டுகிறது;முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருக்கும் உள்ள அனைத்து உரிமைகளையும் எங்களுக்கும் வழங்குகிறது;ஆகவே, இஸ்லாம் என்னை ஈர்க்கிறது; ஆனால், இந்து மதம் என்னை ஈர்க்கவில்லை; இஸ்லாம் ஒரு மதம் அல்ல மாறாக அது ஒரு மார்க்கம் - வாழ்க்கைப் பாதை என்று குறிப்பிட்டார்.
மூன்று நாட்கள் நான்கு இடங்களில் தொடராக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 5,000 (ஜயாயிரம்) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் வெளியீடுகள் அனைத்தும், இரவு உணவுகளும் வழங்கப்பட்டன. குவைத் சிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் ஒரு வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் /  டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live
ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

புதன், 14 ஜனவரி, 2015

குவைத்தில் நடைபெற்ற காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா குவைத்தில் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றது. கடந்த 08.01.2015 அன்று குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்)இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் லீக் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள காயிதே மில்லத் ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார்.

ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் முதன் முறையாக குவைத் வந்தபோது ‘இளம் ஊடகப் போராளி’என்ற விருதையும், 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) விழாவில் ‘ஆவணப்பட ஆளுநர்' என்ற விருதையும் வழங்கி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சிறப்பித்துள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் இந்திய குவைத் நட்புறவு மன்றம், குவைத் கேரள ஃபிரண்ஷிப் சொஸைட்டி, முஸ்லிம் கலாச்சார மையம், குவைத் விடுதலை சிறுத்தைகள் கட்சி, குவைத் தமிழோசை கவிஞர் மன்றம், இஸ்லாமிய வழிகாட்டி மையம், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த ஆவணப்படத்தை குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) வெளியிடுவதற்கான காரணங்களையும், அவசியத்தையும், காயிதே மில்லத் அவர்களின் வரலாறு குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பேராவலை நிறைவேற்றுவதற்காக சங்கம் பாடுபடுவதையும் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பட வெளியீட்டிற்கு முன், சிறப்புரையாற்றிய ஆளூர் ஷாநவாஸ் தன்னுடைய உரையில், இப்படம் வெளியாக தான் பட்ட கஷ்டங்களை விவரித்தார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்டோரின் வாழ்வை விளக்கும் படங்கள் உள்ளபோது காயிதே மில்லத்துக்கென்று ஆவணங்கள் ஏதும் இல்லாததே தாம் இப்படம் எடுக்க உந்து சக்தியாக இருந்தது என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவும் காவிக்கு சிவப்பு கம்பளம் விரித்தபோது தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருந்ததற்கு பெரியார் பிறந்த மண் என்பது மட்டும் மாத்திரமல்ல, காயிதே மில்லத் போன்றோர்கள் பிற சமய, அரசியல் தலைவர்களோடு நெருங்கி பழகியதோடு அவர்கள் மூலம் இஸ்லாத்தை பேச வைத்ததும் காரணம் என்றார். அண்ணா, பெரியார், ராஜாஜி, மபொசி என எல்லோருடனும் அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட்ட காயிதே மில்லத்தின் வரலாறு இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் என்று கூறினார்.

குவைத்தில் இயங்கும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள், சமுதாய ஆர்வலர்கள் முன்னிலை வகிக்க கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவணப்பட குறுந்தகடை ஆளூர் ஷா நவாஸ் வெளியிட, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர்மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ பெற்று கொண்டார். பின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். துணைத்தலைவர் மவ்லவீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்ற, இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார்.

குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சகோதர சமுதாய பெருமக்களும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் இந்த குறுந்தகடுகள் இலவசமாக வழங்கப்பட்டன. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.