திங்கள், 16 பிப்ரவரி, 2009

மருத்துவ சேவைகளில் கவனம்!


ஜமாஅத் தலைவருக்கான தேர்தலில் வெற்றியை நழுவவிட்ட ஆப்பிள் சின்னத்தின் வேட்பாளர் டாக்டர் நூர் முஹம்மது 785 வாக்குகள் பெற்றார். இது குறித்து அவரிடம் நாம் கேட்ட போது, நான் வெற்றிப் பெற்றிருந்தால் சமுதாயப் பணிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து சேவை செய்வேன் என்கிற நிலையிருந்து மருத்துவ சேவைகளில் இன்னும் அதிகம் கவனம் செலுத்துவேன் என்று கூறியதோடு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்தார்.


மேலதிகமாக பரங்கிப்பேட்டை கூகிள் குழுமத்திற்கு அளித்த டெலிபோன் பேட்டியை வாசகர்களின் பார்வைக்காக கீழே:....


தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து?

குறைந்த அளவு ஓட்டுகளே கிடைக்கும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் கிட்டத்தட்ட 800 ஓட்டுகள் கிடைத்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கும் ஓட்டுரிமை இருந்திருந்தால் நான் வெற்றிப் பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும்.

டாக்டர் நூர் முஹம்மத் அவர்களின் ஆலோசனையையும் பெற்று ஜமாஅத்தை நடத்துவேன் என்று யூனுஸ்நானா தனது நன்றியுரையில் கூறியுள்ளாரே?

அது அவரது பெருந்தன்மையின் அடையாளம்.

பெண்களுக்கு ஓட்டுரிமை பற்றி குறிப்பிட்டதால் ஒரு கேள்வி. சமீபத்தில் பெண்களுக்கான ஒரு அமைப்பு என்ற தகவல் குழுமத்தில் வைக்கப்பட்டதே..அது குறித்து...?

அந்த அமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. அது முழுக்க யூனுஸுக்கு எதிராக துவங்கப்பட்டது போன்றுதான் தெரிகின்றது. வெறும் அரசியல் அவ்வளவுதான்.

NRIகளுக்கு கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?

வெளிநாட்டு பரங்கிப்பேட்டை மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

அலமாரிக்கு வெற்றி!

இன்று நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் பதவிக்கான பொதுத்தேர்தலில் அலமாரி சின்னத்தில் போட்டியிட்ட முஹமது யூனுஸ் வெற்றி பெற்றார். அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
வாக்கு விபரம்:
பதிவானவை: 1966
முஹம்மது யூனுஸ்: 1163
நூர் முஹம்மது: 785
செல்லாதவை: 18

சற்றுமுன் முடிந்த வாக்கு எண்ணிக்கையின்படி 378 ஓட்டு வித்தியாசத்தில் முஹம்மது யூனுஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து சான்றிதழையும் வழங்கினர். சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தியவாறு வீதிகளில் உலா வருகிறார் அலமாரி சின்னத்தின் வெற்றி வேட்பாளர் யூனுஸ் .
சான்றிதழை பெறுகிறார்


சின்னகடை முனையில் நன்றி அறிவிக்கிறார்

தகவல்கள்: களத்திலிருந்து இப்னு இல்யாஸ்

கடைசி நொடிப்பொழுதின் வாக்காளர்.

மிகச் சரியாக 5 மணிக்கு கடைசி வாக்காளராக தனது வாக்குப்பதிவினை செலுத்துகிறார்.
 
புகைப்படம்: இப்னு இல்யாஸ்