சனி, 28 பிப்ரவரி, 2009

குறைகிறது கட்டணம்


மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே - 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி, பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ். என்.எல். நிறுவனம் தெரி வித்துள்ளது. தற்போது, இந்த வசதியை வைத்து இருக்கும் சந்தாதாரர்கள் இனி மேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

நன்றி;

இந்நேரம் இவ்வுலகம்

வியாழன், 26 பிப்ரவரி, 2009

கண்டண ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஒழுக்க சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நகர செயலாளர் G.வல்லரசன் தலைமை தாங்கினார்,கடலூர் மாவட்ட செயலாளர் திரு,T.மணி வாசகம் கண்டண உரையாற்றினார்.நகர செயலாளர் பேசுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் எனசொல்வார்கள் ஆனால் அந்த ஆசிரியர்களோ, மாணவிகள் முன்னால் அருவறுக்கதக்க முறையில் சண்டையிட்டுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது இந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதுமட்டுமில்லாமல், அனைத்து ஆண் ஆசிரியர்களையும் பணியிடைமாற்றம் செய்யவேண்டுமென்றார்,இல்லையெனில்இந்திய கம்யூனிஸ்ட் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துமென்றார்.மாவட்ட செயலாளர் T. மணிவாசகம் பேசுகையில் இந்த பெண்கள் மேல்நிலைபள்ளியை பொருத்தவரை பெண் ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கபடவேண்டும், ஆசிரியர் தாழ்வு மனப்பான்மையால் ஒருவரையொருவர் சண்டையிட்டு கொண்டிருந்த போது நீண்டகாலமாக சண்டையை கண்டுக்கொள்ளாத தலைமை ஆசிரியர் மீது கல்வி இலாகா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சமுக பொறுப்பை உணர்ந்து மற்றவர்கள் மதிக்க தக்கமுறையில் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

மருத்துவர்கள் பற்றாக்குறையா?

தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம் பேசுகையில்,
"பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டிட வசதிகள் இருந்தும், போதிய மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறார்கள், அதுவும் இரவு நேரங்களில் பெண் மருத்துவர்கள் இருப்பதில்லை. அது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு இரவு நேரங்களில் பெண் மருத்துவர்கள் இருப்பதற்கு அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுகையில், "பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அந்த மருத்துவமனை கடற்கரை ஓரமாக இருக்கின்ற காரணத்தினால் அதை பயன்படுத்த மக்கள் வரவில்லை. இந்த ஆண்டு 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்குவதாக முதல் அமைச்சர் அறிவித்து அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையை முடிந்தவரையில் அதை புதிய மருத்துவமனையாக உருவாக்குவதற்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நன்றி: தினத்தந்தி 24-02-2009