சனி, 14 மார்ச், 2009

ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!




தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட (?!)
பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?

"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்று.

அதன் பரிணாம வளர்ச்சி தானோ, என்னவோ தெரியவில்லை, பரங்கிப்பேட்டை காஜியார் தெருவில் ரோடு போட சொன்னால் ஓடு போடுகிறார்கள்.
மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,
குளிர் காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை இரண்டாவது படத்திலும்
கோடை காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை மூன்றாம், நான்காம் படங்களிலும் கண்டு களியுங்கள் (?!)

இனி இளவேனிற் காலம் மட்டும் தான் பாக்கி, அந்த காலத்தில் எப்படியோ?
இப்போது-அப்போது என்று காத்திருந்து வெறுத்து போன திருவாளர் பொதுஜனம் தனது பங்காக சாலைகளில் இருக்கும் பள்ளத்தை ஓடுகளை கொண்டு நிரப்பி விட்டார். பரங்கிப்பேட்டை நகரின் பெரும்பாலான தெருக்களில் சாலைகள் போடப்பட்டிருக்கையில் இந்த காஜியார் தெரு மட்டும் தார் வாடையை நுகராமல்
இருப்பது ஏனோ ?

வெள்ளி, 13 மார்ச், 2009

உலக மகளிர் தினச்செய்திகள்

# உலகில் உள்ள அகதிகளில் என்பது சதவிகிதத்தினர் பெண்களும் குழந்தைகளுமே (ஐ. நா. மனித உரிமை அறிக்கை 2001)

# 1994 இல் ருவாண்டாவில் நடந்த இனக்கலவரத்தில் பாலியல் பலாத்க்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். (செஞ்சிலுவை சங்க அறிக்கை 2002)
# இராக்கில் பாக்தாத் நகரத்தில் மட்டும் ஏப்ரல் 2003 வரை கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 400 க்கும் மேல். (மனித உரிமை கண்காணிப்பின் சர்வே 2003)
# கொசாவாவில் சில கிராமங்களில் செர்பிய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் 30 சதவிகிதத்தினர் கர்ப்பிணிகள். (அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை 1999).
இன்னும் தொடர்கிறது பட்டியல். இந்த புள்ளி விவரங்களில் பெண்கள் வெறுமனே எண்களாக சுருங்கிவிடும் நிலையில், மகளிர் தினம் கொண்டாட மனம் வருமா என்ன?
நன்றி : நானே கேள்வி நானே பதில்., ஆனந்த விகடன் 18.03.2009.

வியாழன், 12 மார்ச், 2009

சாலைப் பணி விரைவாக முடிந்தது

MYPNO செய்தி எதிரொலி: சாலைப் பணி விரைவாக முடிந்தது

நகுதா மரைக்காயர் தெருவில் சிமெண்ட் சாலை போடும் பணயில் இருந்த தொய்வு குறித்து தொங்கும் சாலைகள் என்ற தலைப்பில் பிப்ரவரி 20 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி எதிரொலியாக இந்த சாலைப் பணி விரைந்து முடிக்கப்ட்டுள்ளது.

இது குறித்து அங்கு பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, இந்த செய்தி இண்டெர்நெட்டில் வெளிவந்துள்ளது என்று சிலர் கூறினார்கள். ஆனால் இதை நாங்கள் வேண்டுமென்று செய்வதில்லை. போதிய ஆட்கள் வேலைக்கு கிடைக்ககாததினாலேயே சில சிரமங்கள் ஏற்படுகிறது. அந்த சிரமங்களை தாண்டியும் நாங்கள் இதில் அக்கரை எடுத்து இப்பணியை விரைந்து முடித்திருக்கிறோம் என்றார்.