திங்கள், 28 மார்ச், 2011

ஹல்வா கொடுத்தார் M.K.பைசல்...!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் "பரங்கிப்பேட்டை ஹல்வா" முக்கிய இடம் பிடித்துள்ளது. கடந்த வாரம் முதல்வருக்கு முன்னாள் M.LA. சிவலோகம் மகன்கள் சண்முகம் - கோவிந்தராஜ் ஆகியோர் ஹல்வா வழங்கினார்கள். நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க வேட்பாளரும், தனது நண்பருமான ஹஸன் முஹம்மது ஜின்னா-வை அவரது இல்லத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழக பிரதிநிதி M.K.பைசல் யூசுப் அலி சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, "பரங்கிப்பேட்டை ஹல்வா" வழங்கினார். தொடர்ந்து கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த வேட்பாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா-வுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டார்.


இறப்புச் செய்தி

ஆரிய நாட்டு நடுத்தெருவில் மர்ஹும் முஹம்மது கான் அவர்களின் மகனாரும், மர்ஹும் நூர்கான் அவர்களின் மருமகனாரும், மர்ஹும் யாகூப் கான், மர்ஹும் ஆரிப் கான் ஆகியோரின் மச்சானும், மஹ்புப்கான், சான்பாசா அவர்களின் தகப்பனாருமான லத்தீப் கான் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று மாலை 6-30 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்!

பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று தேர்வு எழுதினர்.

அரசு ஆண்கள் பள்ளியில் பரங்கிப்பேட்டை பள்ளிகள் மட்டுமல்லாது சாமியார்பேட்டை உள்ளிட்ட பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். மாணவர்களின் தேர்வை கண்காணிக்க வழக்கமான மேற்பார்வை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.