செவ்வாய், 3 மே, 2011

ஜமாஅத்துல் உலமா: முப்பெரும் விழா..!






பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் ஷரீஅத் விளக்க மாநாடு, கடந்த இரு வாரங்களாக கவுஸ் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்று வந்த கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிலரங்க பரிசளிப்பு நிகழ்ச்சி, பேரவையின் 10-ஆம் ஆண்டு துவக்க விழா, இன்று பகல் மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவிற்கு மீராப்பள்ளி நிர்வாகிகள் K.ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், O.ஜமால் முஹம்மது, அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி S.O. செய்யது ஆரிப், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயலாளர் U.ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மவ்லவி H.அப்துஸ் ஸமத் ரஷாதி கிராஅத் ஓதியவுடன், மவ்லவி A.லியாக்கத் அலி மன்பயீ, மவ்லவி M.S.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி, மவ்லவி S.கவுஸ் முஹ்யத்தீன் மன்பயீ, மவ்லவி அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ, மவ்லவி S.முஜிபுர் ரஹ்மான் ரஷாதி, ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக, வேலூர் ஜாமிஆ அல் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் மவ்லவி A.அப்துல் ஹமீது ஃபாஜில் பாகவீ, "எங்கே செல்லும் இந்த பாதை" என்ற தலைப்பில் மாநாடு நிறைவுப் பேருரையினை நிகழ்த்தினார். 


இந்நிகழ்ச்சியில் தீனிய்யாத் பயிலரங்க போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளும், பயிலரங்கில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.முடிவில் மவ்லவி M.முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி நன்றியுரையாற்றினார். விழாவினை மவ்லவி K.முஹம்மது நிஜாமுத்தீன் காஷிஃபி தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் ஆண்களும், ஏராளமான பெண்கள், மாணவ - மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

படங்கள்:  "அப்காப்"

சனி, 30 ஏப்ரல், 2011

ஜமாஅத்துல் உலமாவின் 7-ம் ஆண்டு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. ஏழாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் பள்ளி மாண-மாணவியர்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.

கடந்த 16-ந்தேதி துவங்கிய இப்பயிற்சி வகுப்புகள் இன்றுடன் முடிவடைகிறது. கௌஸ் பள்ளி வாசலில் நடைபெற்று வரும் இப்பயிற்சிக்காக தேர்வுகளும் நேற்று நடைபெற்றது.
 

தேர்வில் வெற்றி பெற்ற மற்றம் கலந்துக் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு இன்று பரிசுகளும் வழங்ப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில், திருக்குர்ஆனை எப்படி முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவை இடம்பெ;ற்றதுடன், உலமாக்களில் சொற்பொலிவுகளும் நடைபெற்றன.

மின்சார வாரிய செய்திக்குறிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளில் இது நாள் வரை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது. நாளை (01-05-2010) முதல், நேரம் மாற்றப்பட்டு மாலை 4 மணி முதல் மாலை 6 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை கணணிமயமாக்கப்பட்ட பரங்கிப்பேட்டை தபால் நிலையத்தில் செலுத்தலாம் என்றும் இதற்கான சேவைக் கட்டணம் ரூ.5 மட்டும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.