சனி, 14 மே, 2011

பரங்கிப்பேட்டை மாணவிக்கு ரியாத் நிகழ்ச்சியில் வெற்றிப்பரிசளிப்பு

.
தஃபர்ரஜ் நற்பணி அமைப்பு நடத்திய பல்சுவை நிகழ்ச்சி கடந்த 13 - 05 - 2011 அன்று ரியாத்தில் நதா, முஹம்மதியா மகிழகங்களில் சிறப்புடன் நடைபெற்றது.

அவ்வமயம், கடந்த ஆண்டு ரியாத்தில் பன்னாட்டு இந்தியப்பள்ளியில் C B S E பத்தாம் வகுப்பில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவ மாணவிகள் பாராட்டும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். நடந்து முடிந்த மேல்நிலைப் பள்ளித் தேர்வில் 1180 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஆறாவதாக வந்த மாணவர், பன்னாட்டு இந்தியப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்னும் பெருமிதங் கொண்டு அவருடைய தகப்பனார் ரிபாயி அவர்களிடம் பாராட்டும், வெகுமதியான பரிசிலும் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவி ஹமீதா நஸ்லுன் சிதாரா பரங்கிப்பேட்டை மாணவியாவார். அவருடைய தகப்பனார் ஜாஃபர் அலி ரியாத்தில் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இப்னுஹம்துன் செயலாற்றினார்.

வெள்ளி, 13 மே, 2011

பாலகிருஷ்ணன் வெற்றி!


சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.கூட்டணில் அங்கம் வகிக்கும் மா.கம்யூ வேட்பாளர் கே. பாலகிருஷ்ணன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் வாண்டையாரை விட 2270 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். முன்னதாக வெற்றி அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏறபட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 74,600 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

மீண்டும் செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ.: 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!


பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில்இ அதிமுக வெற்றி பெற்றுள்ளது. புவனகிரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் 87413 ஓட்டுகளும், பாமக வேட்பாளர் அறிவுச்செல்வன் 74296 ஓட்டுகளும் பெற்றள்ளனர். இதன்மூலம், அதிமுக 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக  சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டள்ள பரங்கிப்பேட்டையை சாந்த இவருக்க அமைச்சரவையில் பங்குபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.