புதன், 6 மார்ச், 2013

பேரூராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா! ஜமாஅத்ததுல் உலமா சபை நடத்தியது!!

கடந்த வாரம் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பறு முனைவர் பட்டம் பெற்ற பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா பேரவையினர் பாராட்டு விழா நடத்தினர். இவ்விழாவில் ஷரிஅத் மாநாடு நடத்துவதற்கான ஆலோசனையும் நடைபெற்றது.
 
பேரவை தலைவர் மவ்லவி அப்துல் காதர் உமரி தலைமையேற்று சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் நடைபெற்ற இவ்விழாவில் பரங்கிப்பேட்டை மஹ்முதிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி முஜிபுர் ரஹ்மான் கிராஅத் ஓதpனார்.  அதைத் தொடர்ந்து மவ்லவி ஸதகத்துல்லாஹ்,  மவ்லவி இஸ்மாயில் நாஜிஇ கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், கலிமா பள்ளியின் தாளாளர் இஸ்மாயில், இண்டோமால் ஜமால், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர் லியாகத் அலி, பொறியாளர் அப்ரா ஷாஹூல் ஹமீத், தொழிலதிபர் தவ்ஹீத், மவ்லவி அப்துஸ் ஸமது ரஷாதி, தவ்லத் நிஸா நிஸ்வான் மதரஸா நிர்வாகி ஆரிப், ஜகரிய்யா ஸாஹிப், மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயலாளர் கமாலுத்தீன் என பலரும் யூனுஸ் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
 
இவ்விழாவில் பள்ளிவாசல் முத்தவல்லிகள், பல்வேறு ஊர் ஜமாஅத்தார்கள்இ உலமாக்கள் என சுமார் 300;ககும் மேற்பாட்டோர் கலந்து கொண்டனர். முஸ்லிம் பெண்களின் சீர்திருத்தம், அரசியல், ஊடகம்,  நீதிதுறை போன்றவற்றில் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளை களைவதற்கும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அரசாங்கத்திற்கு தங்களின் உணர்வுகளை எடுத்துரைப்பதற்கும் சிறப்பு மாநாடு நடத்துவதற்கு விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி





வெள்ளி, 1 மார்ச், 2013

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: பரங்கிப்பேட்டை தி.மு.க-வினர் கொண்டாட்டம்!

பரங்கிப்பேட்டை: தமிழக முன்னாள் துணை முதல்வரும், தி.மு.கழக மாநிலப் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாள் மாநிலமெங்கும் இன்று தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டு வருகின்றது.




பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, நகர செயலாளர் ஜெ.பாண்டியன் தலைமையில், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், நகர இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.பைசல் யூசுப் அலி ஆகியோர் முன்னிலையில் பால் பழம், ரொட்டி ஆகியவை வழங்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை வழக்குரைஞர் அணி சார்பாக நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சக்திவேல், ஜெயபால், தியாகராஜன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
தெத்துக்கடை பகுதியில் சாதாத்கான், தி.மு.க. கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், நகர அவைத்தலைவர் தங்கவேல் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், ஒன்றிய பிரதிநிதி கோமு நகர தி.மு.க.நிர்வாகி வேலவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.எம்.காஜா கமால், யூ.ஹபீப் ரஹ்மான், பொற்செல்வி, முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன், ஜாபர் அலி, நாசர் பக்ருதீன், சரவணன், ஆறுமுகம் செட்டியார் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக்கொண்டனர்

புதன், 15 பிப்ரவரி, 2012

இடஒதுக்கீடு கொடுக்காவிட்டால் நாங்களே எடுத்துக் கொள்வோம்!


கடலூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்டந்தோறும் நேற்று வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் நேற்று நடைபெற்ற இப்போராட்டத்தில் பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம், கடலூர் முதுநகர், லால்பேட்டை, காட்டுமன்னார்குடி, சிதம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் தவ்பீக் கண்டன உரையாற்றியபோது, 'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால், நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு மாநில தலைநகரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று குறிப்பிட்ட அவர், எங்களின் நிலையை முஸ்லிம் நீதிபதிகள் கூறவில்லை மாறாக அரசு நியமித்த சச்சார் கமிட்டிதான் எங்களின் மிகவும் பின்தங்கிய நிலையை எடுத்துரைக்கிறது. எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்காவிட்டால் நாங்களே எடுத்துக் கொள்வோம் என்றார்.

போராட்டத்தில் பங்கேற்ற, பரங்கிப்பேட்டை TNTJ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலர் மருத்துவர், காவல் துறை அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் போன்று வேடமணிந்து இந்நிலை வேண்டும் என்றும் இறைச்சிக்கடைக்காரர், சலவை செய்பவர் போன்று வேடமணிந்து இதுதான் எங்களின் நிலையென்றும் சொல்லியிருந்தது மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

படங்கள்: TNTJ