வியாழன், 25 ஏப்ரல், 2013

பளபளக்கும் சென்னை ஏர்போர்ட்!



சென்னை பன்னாட்டு முனையம் விரிவக்கத்துடன் நவீன மயமாக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்காக தயாராக உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால வளர்ச்சியின் தேவையை சமளிக்க கூடிய வகையில் 1,33,462 சதுர மீட்டர் கொண்ட புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு உள்ளன. 36 மாதங்களில் முடிக்கவேண்டிய இந்த பணிகள், நிலம் கையகப்படுத்தல் போன்ற பணிகளால் தாமதம் ஏற்பட்டது.

தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. விமான நிலைய முனையங்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டாலும், அவற்றை ஒரு மாதத்திற்குள் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இந்த விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் ஆண்டுக்கு 1 கோடியே 40 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

பயணிகள் எந்தவித தடையின்றி விரைவாக பயணம் செய்யும் வகையில் புதிய விமான நிலையம் அமைந்துள்ளது.. தற்போது கட்டுமானப் பணியில் இருக்கும் சென்னை மெட்ரே ரயில் போக்குவருத்து இரண்டு முனையங்களுடன் இணைக்கப்பட உள்ளது.

புதன், 24 ஏப்ரல், 2013

லயன்ஸ் கிளப் - மாவட்ட ஜமாஅத் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் (படங்கள்)










பரங்கிப்பேட்டை அரிமா சங்கமும் (லயன்ஸ்  கிளப்)  கடலூர் மாவட்ட ஐக்கிய  ஜமாஅத்தும் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்  ஒன்றை இன்று மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில்  நடத்தின. (துண்டு பிரசுரத்தில் முஹம்மதியா ஷாதிமஹால் என்று குறிப்பிடப்பட்டிருந்தது).

பரங்கிப்பேட்டை நகர அரிமா சங்கத் தலைவரும் , மாவட்ட ஜமாஅத்தின் தலைவருமான பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் அரிமா M.S..முஹம்மது யூனுஸ் வரவேற்புரையாற்றினார். அரிமா  334-A3 மாவட்ட ஆளுநர் R.M.  சுவேதகுமார் முகாமைத் தொடங்கி வைத்தார்.

“என்னை-யும் கவனியுங்களேன்” – கும்மத்பள்ளி குளம்


பரங்கிப்பேட்டை: மாசற்ற காற்று,  நீர் வளம் இவைகளே, வருங்கால சமுதாயத்திற்கு நாம் இட்டும் செல்லும் சொத்துக்கள் என்று சுற்றுப்புற சூழலுக்காகவும், நீர் வளத்திற்காகவும் குரல்கள் வலுவாக ஒலிக்க தொடங்கி பக்கீர் மாலிமார் பள்ளி குளம் தூர் அகற்றல்  போன்ற நல்ல பல மாறுதல்கள் முன்னெடுத்து செல்லப்படும் வேளையில்,  கும்மத்பள்ளி குளம் தாமரை செடிகளால் சூழப்பட்டு பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

 புதிய பள்ளிவாசல் கட்டிடம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர்,  குளத்தின் பரமாரிப்பு பணியிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு