புதன், 1 மே, 2013

ஜமாஅத் நிர்வாகிகளுடன் தேர்தல் குழுவினர் சந்திப்பு:!



பரங்கிப்பேட்டை: டாக்டா எஸ். நூர் முஹம்மது தலைமையிலான இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகம் கலையப்படுவதை அடுத்து புதிய தலைவரை தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையடுத்து தேர்தல் குழுவினரும் யார் யார் என்று அறிவிக்கப்பட்டது.

நேற்று இரவு 7 மணியளவில் தலைமை தேர்தல் அதிகாரியாக எம்.ஈ.எஸ். அன்சாரி தலைமையில் தேர்தல் குழுவினர் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து பேசினர். இதில் துணைத் தலைவர் எம்.எஸ். அலி அக்பருடன் நடந்த சந்திப்பின் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை பற்றி விளக்கி கூறினர். இதனையடுத்து
தேர்தல் அலுவலக இடம், மனுதாக்கல் தேதி, தேர்தல் போன்றவற்றை விரைவில் தேர்தல் குழுவினர் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது ஜமாஅத் நிர்வாகிகள் கலிக்குஜ் ஜமான், ஷாஜஹான், ஹனிபா, சுல்தான் அப்துல் காதர் மற்றும் தேர்தல் அதிகாரிகளான ஆர். ஹபிபுர் ரஹ்மான், எஸ்.ஏ. ரி யாஸ் அஹமத், எல். ஹமீது மரைக்காயர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

காத்து வாங்கும் மீன் மார்க்கெட்..! (படங்கள்)




பரங்கிப்பேட்டை: தமிழக அரசு விதித்துள்ள மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீன்கள் விறபனை செய்யப்படும் பரங்கிப்பேட்டை மீனவர் அங்காடி வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

படங்கள்: ஹசன் அலி

அ..தி.மு.க.வின் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!




பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டை நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்த தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நேற்று மாலை சின்னக்கடை மற்றும் சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் நடைப்பெற்றது.

நகர செயலாளர் கே. மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் மற்றும் கழக பேச்சாளர் முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இதில் தொகுதி கழக செயலாளர் பி.எஸ. அருள், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர், ஆர். சுப்பரமணியன், ஒன்றியக்குழு தலைவர் பி. அசோகன் ஆகியோரும் உரை நிகழ்தினர். நகர கழக செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகள் கலந்துக் கொண்ட இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி ஹெச். ஷாஜஹான் மற்றும் அம்மா பேரவை செயலாளர் முஹமது இக்பால் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

படங்கள்: ஹசன் அலி