சனி, 1 ஜூன், 2013

ஆலங்கட்டி மழை பரங்கிபேட்டை வந்தாச்சு! (படங்கள்)




பரங்கிபேட்டை: தமிழகம்  முழுவதும் இந்த கோடைக்காலம் வெயில்  தாங்க முடியாத அளவு இருந்த நிலையில் , கடந்த இரண்டு தினங்களாக சிறிது மேக  மூட்டத்துடனே இருந்து வந்த பரங்கிபேட்டை பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்யத்துவங்கியது. இதனிடையே,  பு.முட்லூர் , சி. முட்லூர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சாலையில் வாகனங்களில் சென்றவர்களும் அந்த பகுதி மக்களும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
படங்கள்: ஹசன் அலி 
 

நாளை ஜமாஅத் பதவியேற்பு நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய நிர்வாகத்திற்கு கேப்டன் ஹமீத் அப்துல் காதர்  தலைவராகவும், டாக்டர் எம்.எஸ். முஹம்மது யூனூஸ் செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்விருவருக்கான பதவியேற்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், அறிஞர் பெருமக்கள், பள்ளிவாசல் முத்தவல்லிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மேலதிக விபரங்ளை இணைப்பில் காண்க.

புதன், 29 மே, 2013

இந்திய பன்னாட்டு பள்ளியில் பரங்கிப்பேட்டை மாணவி சாதனை!



ஜெட்டா: +2 பொதுத் தேர்வு முடிவுகளை அடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ (CBSE) தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஜெத்தாவிட் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியில் 95.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் 3-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் பரங்கிப்பேட்டை மாணவி சபியுன்னிஸா.

பரங்கிப்பேட்டையைச் சார்ந்த மொய்தீன் சாஹிப் மற்றும் கௌஸுன்னிசா தம்பதியின் புதல்வியான சபியுன்னிஸா ஜெத்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். சி.பி.எஸ.இ. பாடத்திட்டத்தின் முறையில் நடைப்பெற்ற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று பள்ளியின் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

மாணவியின் இந்த சாதனை குறித்து சவுதி அரேபிய நாளேடுகளான சவுதி கெஸட் மற்றும் அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.