ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

பரங்கிப்பேட்டையில் மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு

கடலூர் மாவட்டம் தழுவிய அளவில் மாபெரும் மீலாது(ஸீரத்து)ன் நபி (ஸல்) மற்றும் ஷரீஅத் விளக்க மாநாட்டை கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவையினரும், பரங்கிப்பேட்டை மீலாது கமிட்டியினரும் இணைந்து நடத்துகின்றனர்.

பரங்கிப்பேட்டை ஹக்கா ஸாஹிபு தர்கா தெருவில் உள்ள இஜ்திமா திடலில் வரும் (பிப்ரவரி) 23ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை இம்மாநாடு நடைபெறும்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மன்பயீ அவர்கள் தலைமையேற்க, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் கேட்பன் எம். ஹமீது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அறிஞர் பெருமக்கள் பலர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி, சென்னை அடையார் பளளியின் தலைமை இமாம் மவ்லவீ முனைவர் எம். ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர். மீலாது கமிட்டி தலைவர் எஸ். ஓ. செய்யது ஆரிஃப் நன்றியுரையாற்ற இருக்கின்றார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

PISWA பொதுக்குழு கூட்டம்



சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவில் இன்று பகல் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் கரீம்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தினை ஹெச். ஹமீது கவுஸ்  இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.

அண்மையில் பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட துணைத்தலைவர் எஸ்.ஓ.ஜியாவுதின் அஹமது, அது தொடர்பான விவரங்களையும், குர்ஆன் மக்தபா செயல்பாடுகளையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூர் அமைப்பின் ஏற்பாட்டில்  செயல்படுத்தப்பட்டு வரும்  "செவிலியர் சேவை" தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது

சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு, இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதில் இரு வேறு கருத்துக்கள் நிலவுவதால், ஜமாஅத் நிர்வாகம், பரங்கிப்பேட்டையில் சமையல் எரிவாயு முகவாண்மையை தொடர்பு கொண்டு மக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டது.

 பரங்கிப்பேட்டையில்  சமுதாய பணியாளர்களின்(பெண்) தேவை அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்ட இப்பொதுக்குழு அதற்கான பணியாளர்களை விரைந்து நிரப்ப ஜமாஅத் நிர்வாகத்தை  கேட்டு கொண்டுள்ளது.

கூட்டத்தில் செயலாளர் ஹெச்.தாரிக் ஹுஸைன், பொருளாளர் எம்.ஜி.கமாலுதீன், மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

சனி, 4 ஜனவரி, 2014

அப்துர் ரஹ்மான் எம்.பியுடன் சந்திப்பு

















பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவரும், பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத்தின் செயல் தலைவருமான முனைவர் ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது.



கடந்த வாரம் திருச்சியில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்பாடு செய்த இளம்பிறை எழுச்சிப் பேரணி மற்றும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு நிகழ்ச்சிகளுக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து வருகை தந்ததுடன் இந்த கவுரவிப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். சமூக, அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் கட்சியின் பரங்கிப்பேட்டை நகர தலைவர் பஷீர் அஹ்மது, எஸ்.எஸ். அலாவுதீன், மீ.மெ. மீரா ஹூஸைன், ஜே. உதுமான் அலீ மற்றும் முஸ்தஃபா கமால் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பு ஏற்பாடுகளை MYPNO ஆசிரியர் கலீல் பாகவீ செய்திருந்தார்.