பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 23 மார்ச், 2011


தொகுதி பெயர் : சிதம்பரம்

தொகுதி எண் : 158

அறிமுகம் : மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது.

தற்போதைய எம்.எல்.ஏ. : அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.)

தொகுதி மறுசீர‌மைப்பு : தொகுதி மறுசீரமைப்பில் சிதம்பரம் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

எல்லை : தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நகராட்சி : சிதம்பரம் நகராட்சி - 33 வார்டுகள்

பேரூராட்சிகள் : (1) கிள்ளை பேரூராட்சி -15 வார்டுகள் (2) பரங்கிப்பேட்டை பேரூராட்சி - 18 வார்டுகள் (3) அண்ணாமலை நகர் பேரூராட்சி - 15 வார்டுகள்

கிராம ஊராட்சிகள் : 69

மேல்புவனகிரி ஒன்றியம் (7) : சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், லால்புரம்.

குமராட்சி ஒன்றியம் (21) : அகரநல்லூர், சிதம்பரம் நான்-முனிசிபல், இளநாங்கூர், ஜெயங்கொண்டப்பட்டினம், கடவாச்சேரி, காட்டுக்கூடலூர், கீழகுண்டலப்பாடி, கூத்தன்கோயில், நாஞ்சலூர், பெராம்பட்டு, பூலாமேடு, சாலியந்தோப்பு, சிவபுரி, சிவாயம், சி.தண்டேஸ்வரநல்லூர், தவர்த்தாம்பட்டு, உசூப்பூர், வையூர், சி.வாக்காரமாரி, வல்லம்படுகை, வரகூர்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் (41) : மணிக்கொல்லை, பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, கொத்தட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, கீழமணக்குடி, பு.அருண்மொழிதேவன், குரியாமங்கலம், ஆயிபுரம், பு.ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, பு.முட்லூர், நஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி, பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, மீதிகுடி, நக்கரவந்தன்குடி, உத்தமசோழமங்கலம், குமாரமங்கலம், கணக்கரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கவரப்பட்டு, வசப்புத்தூர், பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, பு.மடுவங்கரை.

வாக்காளர்கள் : ஆண் - 94,192, பெண் - 92,427 மொத்தம் - 1,86,619

வாக்குச்சாவடிகள் : மொத்தம் 215

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் : கோட்டாட்சியர் எம்.இந்துமதி : 94450 00425

இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 13 முறை
காங்கிர‌ஸ்: 5+2 முறை வெற்றி*
தி.மு.க.: 4 முறை வெற்றி
அ.தி.மு.க.: 3 முறை வெற்றி
த‌.மா.கா.: 1 முறை வெற்றி
*1952, 1957 தேர்தல்களில் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.

குறிப்புகள்:
*1952ம் ஆண்டு தேர்தலில்தான் சிதம்பரம் தொகுதி உருவாக்கப்பட்டது.
*கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.
*சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் சிதம்பரம் ச‌ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.
*சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ்தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.
*மூப்பானாரின் தமிழ் மாநில காங்கிரஸ் இங்கே ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.
*தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் கே.எஸ். அழகிரி, 1991, 1996 சட்டசபைத் தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆனார்.
*அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 1991 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

வேட்பாள‌ர்க‌ள் ப‌யோடேட்டா:

2006 தேர்தல் முடிவு:
(அ.தி.மு.க. வெற்றி)
மொத்த‌ வாக்காள‌ர்க‌ள்: 1,47,220
ப‌திவான‌வை: 1,11,066
வாக்கு வித்தியாசம்: 16,810
வேட்பாளர்களின் எண்ணிக்கை: 18
வாக்குப்பதிவு சதவீதம்: 75.44
அருண்மொழிதேவன் (அ.தி.மு.க.): 56,327
பாலகிருஷ்ணன் (சி.பி.எம்): 39,517
ராஜமன்னன் (தே.மு.தி.க.): 10,303
சீனுவாசன் (பி.ஜே.பி.): 1,054

இதுவரை எம்.எல்.ஏ.கள்:
2006 அருள்மொழிதேவன் (அ.தி.மு.க‌.)
2001 சரவணன் துரை (தி.மு.க‌.)
1996 கே.எஸ்.அழகிரி (த.மா.கா)
1991 கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்)
1989 கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க‌.)
1984 கனபதி (அ.தி.மு.க‌.)
1980 கனபதி (அ.தி.மு.க‌.)
1977 கலியமூர்த்தி (தி.மு.க‌.)
1971 சொக்கலிங்கம் (தி.மு.க‌.)
1967 ஆர்.கனகசபை பிள்ளை (காங்கிரஸ்)
1962 சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1957 வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்), சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)
1952 வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்), சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)

க‌ட‌ந்த‌ கால‌ தேர்த‌ல் முடிவுக‌ள்:

2001 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,67,006
பதிவானவை: 1,03,738
சரவணன் துரை (தி.மு.க.): 54,647
அறிவுச்செல்வன் (பா.ம.க.): 42,732

1996 (தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,51,992
பதிவானவை: 1,08,429
கே.எஸ்.அழகிரி (த.மா.கா): 52,066
ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்): 23,050

1991 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,42,369
பதிவானவை: 98,437
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்) 48,767
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (தி.மு.க.): 29,114

1989 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,27,893
பதிவானவை: 86,451
கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.): 35,738
ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்): 19,018

1984 (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,14,114
பதிவானவை: 90,376
கணபதி (அ.தி.மு.க.): 47,067
சுப்பிரமணியன் (தி.மு.க.): 37,824

1980 (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,12,269
பதிவானவை: 81,763
கணபதி (அ.தி.மு.க.): 41,728
கலியமூர்த்தி துரை (தி.மு.க.): 38,461

1977 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,09,561
பதிவானவை: 74,156
கலியமூர்த்தி துரை (தி.மு.க.): 22,917
முத்து கோவிந்தராஜன் (அ.தி.மு.க.): 19,586

1971 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 95,620
பதிவானவை: 73,245
சொக்கலிங்கம் (தி.மு.க.): 35,750
கோபால கிருஷ்ணன் (ஸ்தாபன காங்கிரஸ்): 34,071

1967 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 90,560
பதிவானவை: 73,772
கனகசபை பிள்ளை (காங்கிரஸ்): 34,911
சொக்கலிங்கம் (தி.மு.க.): 33,356

1962 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 98,172
பதிவானவை: 65,117
சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்): 33,438
ஆறுமுகம் (தி.மு.க.): 23,837

1957 (காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி)*
மொத்த வாக்காளர்கள்: 1,65,203
பதிவானவை: 1,63,787
வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்): 37,255
சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்): 37,089
சொக்கலிங்கம் (சுயேட்சை): 30,345
சிவசுப்பிரமணியம் (சுயேட்சை): 26,489
*இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.

1952 (காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி)*
மொத்த வாக்காளர்கள்: 1,31,550
பதிவானவை: 1,44,680
சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்): 39,509
வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்): 33,427
சுவாமி கண்ணு (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி): 30,517
சிவசுப்பிரமணியன் (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி): 25,760
*இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.

இது பார்வையாளர்களுக்கு...

தொகுதியின் பிர‌ச்னைக‌ள், கோரிக்கைக‌ள், வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பதையெல்லாம் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதுங்களேன்.

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234