திங்கள், 14 ஜனவரி, 2008

கச்சேரி தெருவில்... பிளாட்ஃபார்முடன் புதிய தார் சாலை பணி ஆரம்பம்.


கச்சேரி தெருவில்... பிளாட்ஃபார்முடன் புதிய தார் சாலை பணி ஆரம்பம். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் புதிய தார் சாலை போட்டு இரு ஓரங்களிலும் நடைபாதை (பிளாட்ஃபார்ம்) அமைக்க பேரூராட்சி திட்டத்தின் கீழ் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிளாட்ஃபார்ம் அமையப்பெறுவதற்காக ஏற்கனவே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது சாலை சற்று விரிவாக்கப்பட்டு புதிய தார் சாலை போடும் வேலை இன்று (14-01-2008) துவங்கிவிட்டது. இந்த வேலை நிறைவேறிய பிறகு கச்சேரி தெரு நிச்சயமாக எழில் பெறும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது.

1 கருத்து:

  1. படத்துடன் கூடிய நல்லத் தகவல். நடைப்பாதை வியாபாரிகளுக்கு கஷ்டமில்லாமல் இருக்க வேண்டும். சாலை விரிவாகினால் அழகு கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    ரோடு போடுகிறோம் என்றப் பெயரில் ரோடுகள் உயர்ந்து வீடுகள் பள்ளத்துக்குள் போய்விடக் கூடாது என்பதில் நாம் அனைவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...