'சமரசம் உலாவும் இடமே' என்று சமத்துவத்திற்கு உதாரணமாக எல்லா காலத்திலும்-இனத்திலும் எடுத்துக் காட்டப்படுவது மயானங்கள் தான். எல்லோருக்குமே, யார் எவர் என்ற பாகுபாடின்றி ஆறடி மண்ணே அங்கு இருப்பிடமாகிறது.
நமதூர் பரங்கிப்பேட்டையின் மீராப்பள்ளி மயான பூமி சீரமைப்பிற்காக அண்ணா மறுமலர்சி திட்டத்தின்படி சுமார் 1.75 இலட்சம் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சியான செய்தி. ஒரு பள்ளிவாசல் மயான சீரமைப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டது இதுவே முதலமுறை. (இதற்கு முன்னர் கோவில்கள், தேவாலயங்களுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது). நிதி ஒதுக்கியது மட்டுமல்லாமல் மளமளவென சீரமைப்பு வேலையும் தொடங்கப்பட்டுவிட்டது.
புதிய சிமெண்ட் பாதை அமைக்கப்பட்டு, மின் விளக்கு கம்பங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டு, சுற்று சுவர்களும் மேடு பள்ள சீரமைப்புகளும் முழுவேகத்தில் நடைபெறுகின்றன. இந்த வேகத்தில் நிழல் தந்த மரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டது வருத்தத்திற்குரியது தான். ஆனால் மயான சீரமைப்புக்கு மரங்களையும் சாய்க்கப்பட்டேயாக வேண்டும் என்றிருக்கும் நிலையில் ஆட்சேபத்திற்கு வழியில்லை தான். அதே சமயம், ஆங்காங்கே சில 'குடும்ப' கோரிகள் என்ற பெயரில் மய்யித்துக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் - அதுவும் சிதைந்து போன நிலையில் காணப்படுகின்றது. அவற்றையும் நிரவி சமன் செய்தால் நன்றாக இருக்குமே என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது
நல்லப்பதிவு.
பதிலளிநீக்குகுடும்பகோரிகள் கட்டாயம் அகற்றப்படத்தான் வேண்டும்.
இத்தகைய கோரிகள் கணிசமான இடங்களைப் பிடித்துக் கொண்டு எத்துனை ஆண்டுகள் ஆனாலும் அதன் மீது வேறு எவருக்கும் இடங்கொடுக்க மறுத்து வருகின்றது. அட்கப்பட்ட மையத்தின் மீதே சில மாதங்களில் இன்னொரு மையத்தை அடக்கும் சூழ்நிலை வந்தாலும், கோரிகளை அகற்றி அங்கு மையத்தை அடக்கலாம் என்ற எண்ணம் யாருக்கும் வராதது - கோரிகள் எல்லாம் பெரிய இடத்துக்குரியது அதை எப்படி அகற்றுவது என்று பயப்படுவது - வேதனைத்தான்.
இப்போதைய சீரமைப்புப்பணிகளோடு அத்தகைய கோரிகள் - தனி அடையாளம் காட்டும் கப்ருகள் - அகற்றப்பட்டாக வேண்டும்.
இந்த சிந்தனையை முன்வைத்த சகோதரர் பக்ருத்தீன் அவர்களைப் பாராட்டியாக வேண்டும்.
தொடரட்டும் பணி.