வெள்ளி, 1 பிப்ரவரி, 2008

பரங்கிப்பேட்டையில் CPI சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!


பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயன் தெருமுனையில் இன்று (30-01-2008) புதன் மாலை 6 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அரசு மருத்துவமனையில் இரவுநேர சிகிச்சைக்காக இரவுபணிநேர மருத்துவரை பணி அமர்த்தாதைக் கண்டித்தும்; பரங்கிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதிய அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்தும்; பரங்கிப்பேட்டை பேரூராட்சில் 16, 17, 18 வார்டுகளில் தமிழக அரசு வழங்கும் இலவச கேஸ் இணைப்பிற்கு ஏழை-எளிய மக்களிடம் லஞ்சம் வாங்குவதைக் கண்டித்தும் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...