திங்கள், 4 பிப்ரவரி, 2008

எதற்கு இந்த காத்திருப்பு?


இராஜஸ்தான் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்ட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இப்புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு மாதங்கள் பல ஆகியும் பூட்டிய நிலையிலேயே உள்ளது. அடுத்த மாதம், அடுத்த வாரம் என்றே நாட்கள் ஓடிவிட்ட நிலையில் இதுவரை எந்த புதிய தகவலும் திறப்பு விழா பற்றி கிடைக்கவில்லை. கடைசியாக பேரூராட்சி வட்டாரம் வாயிலாக கிடைத்த தகவலின்படி, ஒரு முக்கிய அமைச்சரின் தேதி கிடைக்காததினால்தான் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது, விரைவில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் அந்த முக்கிய அமைச்சர் வர இருக்கிறார்கள், அதற்காக முழு மூச்சுடன் பேரூராட்சி தலைவர் செயல்நிலையில் இருப்பதாகவும் அறியப்பட்டது.
புதிய மருத்துவமனை திறக்கப்படவுள்ள இந்நிலையில், மருத்துவமனைக்கு வேண்டிய போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் முக்கியமாக இரவு நேர மருத்துவர் ஒருவரை உடனே பணியில் அமர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

1 கருத்து:

  1. அரசியல் வாதிகள், அமைச்சர்களின் வருகைக்காக பள்ளிக் குழந்தைகள் காத்து கிடக்கும்.அரசியல்வாதிகள், அமைச்சர்களின் வருகைக்காக பல நல திட்டங்கள் முடங்கிக் கிடக்கும், அரசியல்வாதிகளின் வருகைக்காக போக்குவரத்து ஸ்தப்பித்து போகும் என்று பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இந்த மருத்துவமனை பூட்டி கிடப்பது பெரிய பொருட்டா என்ன..?

    ஊரின் பிரமுகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து அமைச்சரின் வருகைக்காக காத்து கிடக்கட்டும், மாண்டுப்போகும் நோயாளிகள் மாண்டுகொண்டு இருக்கட்டும்.

    மக்களின் ஆரோக்யமும் அவர்களின் உயிரும் முக்கியம் எவன் வந்தால் என்ன வரவில்லையென்றால் என்ன.. மருத்துவமனையை திறப்போம் என்ற துணிவு யாருக்கு உண்டு?

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...