புதன், 27 பிப்ரவரி, 2008

SSLC & ப்ளஸ் 2 மாணவர்களுடன் கல்விக்குழு நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி!

அரசுப் பொதுத் தேர்வினைக் எதிர்கொள்வது குறித்தும், அடுத்து என்ன படிக்கலாம் என்பதைப் பற்றியும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுடன் ஒரு கலந்துரையர்ல் நிகழ்ச்சிக்கு கல்விக்குழு நேற்று ஏற்பாடு செய்து மக்தூம் அப்பா பள்ளியில் நடத்தியது. கல்விக்குழுத் தலைவர் ஹமீத் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளர்களாக அ.பா. கலீல் அஹமது பாக்கவி மற்றும் இப்னு ஹம்துன் அவர்களும் கலந்துக் கொண்டு மாணவர்களடன் கலந்துரையாடல் நிகழ்த்தினர். மாணவர்களின் கேள்விகளுக்கு ஹமீத் பதிலளித்தார். கல்வியின் அவசியத்தை இப்னு ஹம்துன் வலியுறுத்தி பேசினார். கலீல் அஹமத் பாகவியின் உரை எல்லோராலும் ரசிக்கும்படியாகவும் மாணவர்களை சிந்திக்க தூண்டியதாகவும் அமையப்பபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்தது.

1 கருத்து:

  1. கல்விக் குழுவின் இந்த மாணவ சந்திப்பு உற்சாகமளிக்கின்றது. விடுப்பில் சென்றுள்ள நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கருதி நேரம் ஒதுக்கி இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சகோதரர்கள் கலீல் அஹ்மத், இப்னு ஹம்தூன் இருவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...