கல்விக்குழு சார்பாக 23.03.08 ஞாயிறு காலை 9 மணியளவில் ஓரியன்டல் பள்ளியில் முஹம்மது நபி(ஸல்) என்ற தலைப்பில் மாணவ மாணவியருக்கான பிரசங்க நிகழ்ச்சி நடைபெற்றது. டி.வி., சினிமா போன்ற பெருகி வரும் அனாச்சாரங்களுக்கிடையில், நமது சிறார்களுக்கான சரியான முன்மாதிரி யார்? என்பதை விளக்கும் வகையில் முஹம்மது (ஸல்) அவர்கள பற்றி ஜனாப் எஸ்.ஐ. அப்துல் காதிர் மதனி அவர்கள் மாணவர்களுக்கேற்ப அழகிய உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், முஹம்மது(ஸல்) அவர்களின் சிறப்புக்களயும், உலகில் மற்றெவரையும்விட அவர்கள நாம் நேசிக்க வேண்டிய அவசியத்தையும், நடிகர்கள், அரசியல்வாதிகள ரோல்மாடல்களாக எடுக்காமல், நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முஹம்மது(ஸல்) அவர்களயே அழகிய முன்மாதிரியாக கொள்ளவேண்டும் என்றும் மாணவமாணவியரிடம் விளக்கி பேசினார்கள். பிறகு, பேசப்பட்ட விஷயங்கள் குறித்து சிறிய கேள்விபதில் நிகழ்ச்சியும், (குவிஸ்) மாணவர்தம் ஆளுமைதிறன் வளர்க்க பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் (கலந்துகொண்ட அனைவருக்கும்) வழங்கப்பட்டது. இந்நிகழச்சிக்கான அழைப்பு நோட்டிஸ், பேனர் செலவெதுவுமில்லாமல், மஸ்ஜித், பள்ளிகூடங்கள், அதிகாலை குர்ஆன் மக்தப் வகுப்புகளுக்கு சென்று மாணவ மாணவியரை நேரில் சென்று அழைத்தல் போன்ற முறைகள் கையாளப்பட்டன. அனைத்து செலவுகளும் பிள்ளகளுக்கே சென்றடையுமாறு (பரிசுகள், உண்டிகள்) பார்த்துகொள்ளப்பட்டது. சிற்றுண்டியாக, வித்தியாசமாக (சத்தான) சுண்டல், அவுல் மற்றும் பிஸ்கட் தரப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
கல்விக்குழுவின் இத்தகைய முயற்சிகள் மாணவ - மாணவிகளுக்கு மத்தியில் நல்ல சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரும் இன்ஷா அல்லாஹ்.
பதிலளிநீக்குமாதம் ஒரு பள்ளிக் கூடம் என்று (முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகளில்) இத்தகைய இத்தகைய இஸ்லாமியத் தென்றலை வீச செய்யலாம்.
கல்விக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.