செவ்வாய், 8 ஏப்ரல், 2008

பரங்கிப்பேட்டையில் சுற்றுலா வளாகம் - தினத்தந்தி செய்தி

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுலா தளம் பற்றி தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தி:



பரங்கிப்பேட்டை பேரூராட்சியில்
ரூ.50 லட்சம் செலவில் சுற்றுலா தலம்
கலெக்டர் பார்வையிட்டார்


பரங்கிப்பேட்டை,ஏப்.8-

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் சுற்றலா தலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா மையத்தை கலெக்டர் ராஜேந்திரரத்னூ பார்வையிட்டார்.

புகழ் பெற்ற நகரம்

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை மிகவும் புகழ்பெற்ற நகரமாகும். இந்த நகரில் பாபாஜி கோவில், ஆயிரம் ஆண்டுகள் புகழ் வாய்ந்த சிவன்கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக உயிரியில் உயர் ஆராய்ச்சி மையம் மற்றும் கலங்கரை விளக்கம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பள்ளிவாசல் போன்றவை உள்ளன.

இந்த புகழ்வாய்ந்த பரங்கிப் பேட்டை நகரை சுற்றுலா தலமாக ஆக்க அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதே போல் பேரூராட்சி சார்பில் தலைவர் முகமது யூனுஸ் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவுக்கு கோரிக்கை மனு கொடுத்தார்.

அரசு நிதி ஒதுக்கீடு

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுற்றுலா தளம் அமைக்க தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி பரங்கிப்பேட்டையில் கலங்கரை விளக்கம் செல்லும் வழியில் அண்ணாமலைக்கழக உயிரியில் உயர்ஆராய்ச்சி மையம் எதிர்புறம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் சுற்றுலா தலம் அமைக்கப்பட்டு வருகிறது.

விரைவில் முடிக்க உத்தரவு

இந்த சுற்றுலா தலத்தில் உணவு விடுதி, பயணிகள் ஓய்வு எடுக்கும் குடில்கள், உயர்மின்கோபுர விளக்கு, விளையாட்டு பூங்கா, சுற்றுலா பயணிகள் வெள்ளாற்றில் செல்லும் படகுகள் , படகுகள் நிறுத்தப்படும் ஜிட்டி பகுதி ஆகியவை அமைக்கப்பட்டு பணி கள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த சுற்றுலா மைய கட்டிடங்கள் மற்றும் விளையாட்டுப் பூங்கா ஆகியவற்றை கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பார்வையிட் டார். அப்போது கலெக்டர், பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.

கலெக்டருடன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணைத்தலைவர் செழியன், தாசில்தார் பட்டுசாமி, கவுன்சிலர்கள் காஜாகமால், பசிரியாமாஜாபர், அபாகான், வருவாய்ஆய்வாளர் சரவணன், செயல் அலுவலர் சேவியர் அமல்தாஸ், கிராம நிர்வாக அதிகாரி முத்துநாயகம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: Syed (Haja Mohideen).

5 கருத்துகள்:

  1. parangipettai native is very famouse in the islamic and indian history.why you are not include about SYEDNA ASHABA RASUL OUKKASH RALIALLAHANHU. IT IS ALSO VERY FAMOUSE.MAYBE VAHABIS NOT BELIVE.MOSTLY PEOPLE BELIVE IT.PLEASE AMEND IT IN THIS NEWS.
    THANKS.
    MESA.

    பதிலளிநீக்கு
  2. I foget to say that the battle betveen hyder ali and dutch. it is also in the indian and muslim history.please remember it.
    thanks
    MESA.

    பதிலளிநீக்கு
  3. Sayyidina Abu Okkas Ibn Ohaib radiallahu anho came to Parangipettai from Chittagong, Bangladesh.
    Wallahu alam

    http://www.sunniforum.com/forum/showthread.php?t=9810

    See the link

    பதிலளிநீக்கு
  4. அன்பின் அன்சாரி நானா,
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
    பரங்கிப்பேட்டையின் சுற்றுலா வளாகம் பற்றி இன்றைய தினத்தந்தி(08 ஏப்ரல் '08) செய்தியை - தினத்தந்தி அளித்தவாறே - அளித்ததுதான் இந்தப்பதிவு. இதில் பதிவரின் சொந்தக்கருத்து எதுவுமில்லை. தேவையுமிருக்கவில்லை.

    இன்னும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால், Just a try to throw some light on 'DailyThanthi's article as it is about "Our" native. that's all.

    ஆயினும், நமதூரின் அருமைபெருமைகளைப் பற்றி சுயமாக நாம் பதிவு எழுதும்போது அதில் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களை; அவற்றின் ஆதாரங்களைப் பொறுத்து, நாமே எழுத நேரிடலாம். இன்ஷா அல்லாஹ்.

    செய்தி என்பது 'செய்தி'யாக இருக்கவேண்டுமேயல்லாமல் கருத்துப் பிணைப்பாகவோ, கொள்கைத் திணிப்பாகவோ, விருப்பு வெறுப்பின் முனைப்பாகவோ- சாயங்களைப் பூசிக்கொண்டோ அமையக்கூடாது என்பதுதான் 'செய்தி' பற்றிய எங்கள் கொள்கைஇலக்கணம்' என்பதையும் தங்களுக்கு அறியத் தருகிறோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. As MES.ANSARI (first comments), comments is welcome.கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை மிகவும் புகழ்பெற்ற நகரமாகும். இந்த நகரில் பாபாஜி கோவில், ஆயிரம் ஆண்டுகள் புகழ் வாய்ந்த சிவன்கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக உயிரியில் உயர் ஆராய்ச்சி மையம் மற்றும் கலங்கரை விளக்கம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பள்ளிவாசல் போன்றவை உள்ளன.
    ur(mypno) posted include babaji temple and etc. U don't include the Ukkash (rali) tharka. The above all are same.
    TNTJ PARANGIPETTAI.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...