பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் 13.04.08 ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் அஜென்டாக்களாக நான்கு விஷயங்கள் எடுத்து கொள்ளப்பட்டன.
1. கடந்த ஆண்டிற்கான ஜமாஅத் மற்றும் பைத்துல்மால் நிதிநிலையறிக்கை. இதனை ஜமாஅத்தின் பொருளாளர் ஜனாப் இலியாஸ் நானா அவர்கள் வாசித்து அளித்தார்.
2. கீற்று கொட்டகையாக இருந்த ஜமாஅத்தின் கட்டிடத்தை ஒழுங்குபடுத்தி விஸ்தரிப்பதற்கும் செயற்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது,
3. சென்ற செயற்குழுவில் விவாதிக்கப்பட்தின்படி, கல்விக்குழு ஏற்பாடு செய்துள்ள 10ம், மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பெண்களுக்காக பெண் ஆசிரியைகள கொண்டே நடத்தப்படப்போகும் டியூஷன் பற்றி கல்விக்குழு தலைவர், செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
4. புதிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் வசதிகள் ஏற்படுத்தி தந்த லயன்ஸ் கிளப் மற்றும் ஜமாஅத் செயலாளர் ஜனாப் ஹபீபுர்ரஹ்மான் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.
இவையல்லாமல், பொதுவிஷயங்களாக, மீராப்பள்ளி அடுத்துள்ள சிமெண்ட சந்தில் இருக்கும் பள்ளங்களால் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் அதை சரிசெய்யவும் உறுப்பினர் அலிஹுசைன் நானா அவர்கள் கோரிக்கை வைக்க, உடனே எழுந்த தலைவர் யூனூஸ் அவர்கள் இன்னும் 10 தினங்களில் கண்டிப்பாக அவை சிமெண்ட் பூசப்பட்டு சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தார். வாத்தியாபள்ளி பேருந்து அவ்வப்போது உள்ள வராமல் செல்லுவது, ஊரினுள்ள பேருந்து வேகமாக செல்லுவதால் கற்கள் பறக்கும் அபாயம், என்.டி. வரை டவுன் பேருந்தை இயக்க கோரிக்கை, நீண்ட நாட்களாக வாத்தியாபள்ளியில் இரவு ஹால்ட் ஆகாமல் உள்ள 5ஏ பேருந்து, கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மெத்தனம், போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சமீபத்திய கலெக்டர் வருகையின் போது காஜியார் தெரு சிமெண்ட் ரோடு மாற்றங்கள், பழைய பெண்கள் மேல்நிலைபள்ளியில் வரவேண்டிய அரசு அலுவகங்கள் பற்றியும் அவர் அளித்த குறிப்புகளின் சுருக்கம் வாசித்து காட்டப்பட்டது. கல்வி மேற்படிப்பிற்காக கடலூர் சென்று படிக்கும் மாணவிகள் சந்திக்கும் அவலமான சிக்கல்கள பற்றி கல்விக்குழு தலைவர் விளக்கி ஜமாஅத்தினை ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார். ஜனாப். ராசி டிராவல்ஸ் ராஜா நானா அவர்கள் மாதம் 22,000 க்கு ஒரு சேவையாக இதை ஏற்றுக்கொண்டார். அவர்களின் இந்த மகத்தான ஏற்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அடுத்த கல்வியாண்டில், கடலூர் அதுவும் குறிப்பாக செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவிகள் இந்த பிரத்யேக வசதியை பயன்படுத்திகொள்ளலாம். இதன்மூலம் இன்ஷா அல்லாஹ் வீட்டு வாசலில் கிளம்பி வீட்டு வாசலுக்கே சரியான நேரத்தில் பத்திரமாக வந்து சேரும் பாதுகாப்பான சூழல் உறுதிபடுத்தப்படுகிறது, எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
any religious come to under religious endownment act,any wakf come to under the wakf act, any trust come under the trust act, and any socity come to under the socity act. like this all things under consern act. but our jamath is not under any act,no human rights there. many people not appointed as a excutive member. mostly person fan of janab yonus nana.jamath is the property of all muslim who is native of parangipettai.many young people belive yonus nana is custodian of our native. so he and his presidentship of jamath voilating human rights and ignore other feeling. really one day will meet woindingup.every thing is watching by THE ALMIGHTY OF ALLAH,ALL ARE ANSEREPLE TO HIM.MANY PEOPLE SPEAKE TO ALLAH, HE WIIL REPLAY.
பதிலளிநீக்குHeartly wellcome some steps taken by the jamah in the intrest of the public.
பதிலளிநீக்குசெயற்குழு நிகழ்வுகளை அறிய தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குகல்லூரி மாணவிகளின் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது அல்ஹம்துல்லில்லாஹ்.தீர்வுக்கு முயற்சித்த சகோதரர்களுக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக...
அப்படியே முன்பு வலைப்பூவில் பதியப்பட்ட பு.முட்லூர் பாலம் மற்றும் சாலை சம்பந்தமான விஷயத்தையும் சம்பந்தபட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கலாமே....
€î´³ µÖÒ ÃÆíäÕÅ —×íê—ºé ‡›è ב賙è
பதிலளிநீக்குMutlur
பதிலளிநீக்குPalam patri persappattadhu. higwways Department nadavadiukkay yedukka urudhi alithulladhaga Thalyvar Sonnar
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தயார் நிலையில் உள்ளது. நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் இப்பள்ளி அமையப் பெற்றிருந்தாலும் பாதுகாப்பு சூழல் இல்லாததாகவே உள்ளது.
பதிலளிநீக்குபள்ளியைச் சுற்றி அமைந்துள்ள மதில் சுவர் பழைய நிலையிலேயே குட்டி சுவராகவே உள்ளது. இரு அடுக்குகளாக பள்ளி அமையப் பெற்றிருப்பதால் பள்ளியறைகள் அப்படியே வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. இது மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாகவே அமைந்துள்ளது. முக்கியமாக முஸ்லிம் மாணவிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதன் இப்போதய நிலை என்ன?
mutlur palam sambatmma thaliver sonnathu covery water mathiri therinjutha abupricnes.
பதிலளிநீக்குmr,M.E.S. Do you want jamath presentship to make all things in right ways because you are already a loyer.
பதிலளிநீக்கு