பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 26 ஜூலை, 2008

பரங்கிப்பேட்டையில் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் பணி முடிந்தும் திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனை மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வரிசையில் இன்னுமொரு அரசு அலுவலகம்.


பரங்கிப்பேட்டையில் சார்பதிவாளர் அலுவலகம் ரூ.3 லட்சம் மதிப்பில் புதுப்பித்து பல மாதங்களாகியும் இது வரை திறக்காததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பரங்கிப் பேட்டை, கிள்ளை, புதுச்சத்திரம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர். சார்பதிவாளர் அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. மழை காலங்களில் காங்கிரீட் காரையில் இருந்து தண்ணீர் கீழே கொட்டியதால் முக்கிய ஆவணங்கள் நனைந்தன. மேலும் அலுவலகத் திற்கு வந்து சென்ற பொதுமக்களும் பாதித்தனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தை ரூ. 3 லட்சம் மதிப்பில் புதுப்பிக்க ஆறு மாதத்திற்கு முன் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கின. இதனால் சார்பதிவாளர் அலுவலகம் பரங்கிப் பேட்டை பெரிய மதகு அருகே வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. தற்போது பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இது வரை சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யாததால் மக்கள் பெரிதும் பாதிக்கிப்படுகின்றனர். இந்த பகுதியில் பத்திரம், ஜெராக்ஸ், சாப்பாடு வசதி போன்ற எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், செலவும் அதிகமாக ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி உடன் சார்பதிவாளர் அலுவலகத்தை திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தின-மலர்

1 கருத்துரைகள்!:

hajas5000 சொன்னது…

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முன் வாயிலுக்கு கொஞ்சம் பெயிண்ட் அடிக்க கூடாதா ?. இதே நிலைமை தான் பெண்கள் மேல் நிலை பள்ளியிலும் என்று நினைகிறேன். இதை திரபதற்கு இன்னும் எத்தனை மாதம் ஆகும் என்று தெரிய வில்லை. இதற்காக தான் பெயிண்ட் அடிக்காமல் இருப்பார்கள் என்று நினைகிறேன் . அடித்த பெயிண்ட் வீணாக போய் விடும் என்று வெயிட் பண்ணு கிறார்கள் என்று என்னு கிரேன்.

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234