கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைதொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தகவல்
கடலூர், செப். 10-
கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடக்கிறது என்று தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்தார்.
நேரடி சேர்க்கை
அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடலூர் செம்மண்டலத்தில் அமைந்திருக்கும் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்புள்ள பல தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற் பிரிவிற்கான சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. மேலும் பிற்படுத்தப்பட்ட மகளிருக்கான சில இடங்கள் காலியாக உள்ளன.
இதில் சுருக்கெழுத்து தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்).
கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற் பிரிவுகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களும், துணி வெட்டுதலும், தைத்தலும் பிரிவுக்கு குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம். சுருக்கெழுத்து தட்டச்சு (ஆங்கிலம்) பிரிவில் தற்போது புதிய பாடத்திட்டத்தின்படி கணினி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவற்றிற்கான நேரடி சேர்க்கை வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கல்விச்சான்றுடன் நேரில் வந்து முதல்வரை சந்தித்து பயிற்சியில் சேரலாம். ஆண்டு கட்டணமாக ரூ.145-ம், விண்ணப்பக்கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் சேரலாம்
இதே போல மற்றொரு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கடைசலர் மற்றும் பிளாஸ்டிக் குழைம வழிமுறை பணியாளர் தொழிற்பிரிவுகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதில் சேர பிளஸ்-2, மற்றும் 10-ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், ரூ.205 ஆகியவற்றுடன் வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நேரில் வரவேண்டும்.
இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.
நன்றிகள்: 1).தினத்தந்தி
2). சகோ. அ.பா. கலீல் அஹமது பாகவீ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக