பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு செல்லும் பேருந்து விதிகளை மீறி சிதம்பரத்திலிருந்தே பயணிகளை ஏற்றிக்கொண்டு நிறைந்த பேருந்தாக பரங்கிப்பேட்டைக்கு தினமும் வருவது வாடிக்கையாக இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை செல்ல சுமார் 60 பயணிகள் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். பெருநாள் விடுமுறைக்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. 9:50 மணிக்கு வழக்கம் போலவே ஃபுல்லாக வந்த பேருந்தினை கண்டு பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது. வார்த்தையாடல்களுக்கு பிறகு தனது தவறை ஒத்துக்கொண்ட நடத்துனர் நாள முதல் இதுபோல் நடக்காது என்று உறுதியளித்தார்.
ஆனாலும் சமாதானம் அடையாத இளஞர்கள், வந்திருக்கும் பேருந்தில் இடம் வழங்கவேண்டும் அல்லது உடனே ஒரு புதிய பேருந்தினை ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரி கடுமையாக வாதிட்டனர். அதிலுள்ள சங்கடங்கள விளக்கி ஓட்டுநர் பேச இவர்கள் வாதம் புரிய, வார்த்தைகள் வலுக்க நிலைமை ரசாபாசமாவதற்குள் அங்கிருந்த ஜமாஅத் செயலாளர் பாவாஜான் மற்றும் அந்த நேரத்தில் அங்கு வந்த காவல்முறை ஆய்வாளர் இருவரும் மாணவர்களை சமாதானம் செய்து ஓட்டுநரிடம் இதுபோல் மீண்டும் நடக்ககூடாது என்று எச்சரித்தும் அனுப்பினர்.
ஆனாலும் தங்களது தற்போதைய பிரயாண பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் மக்கள் அதே பேருந்தில் தொங்கிக்கொண்டு சென்றனர். (துர்கா அன்று வரவில்லை)
என்னதான் நல்லது நடந்தாலும் குறுக்கே ஏர் ஓட்டும் இதுபோன்ற அரசு ஊழியர்கள் இருக்கும் வரை மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது போல் உள்ளது. இந்த நிலை மாறுமா அல்லது தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
எந்த பஸ்ஸாக இருந்தாலும் பரங்கிப்பேட்டையிலிருந்து புறப்பட்டால் பிரச்சினை இல்லை. வழி பரங்கிப்பேட்டை என்பதுதான் பிரச்சினையே!
பதிலளிநீக்குஆதலால், பேரூராட்சி நிர்வாகம் இதற்கொரு நல்ல முடிவை எடுக்க போக்குவரத்துத் துறையிடம் புகார் அளிக்க வேண்டும்.
இன்னொன்று... வடலூரில் துவக்கப்பட்ட புதிய பணிமனை பரங்கிப்பேட்டையில் துவக்கப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
ஹூம்... அதெல்லாம் எப்ப நடந்து...