திங்கள், 6 அக்டோபர், 2008

பயோடேட்டா : பரங்கிப்பேட்டை

இதில் நகைச்சுவை இழையோடும்...
ஆனால், முழுவதும் நகைச்சுவை அல்ல...

பெயர் : பரங்கிப்பேட்டை
வயது : தெரிந்தால் சொல்லலாம்.
கல்வித்தகுதி : பத்தாவது 2 சப்ஜெக்ட் ஃபெயில்
தொழில் : வீடுகளில் முதலீடு செய்வது
உப தொழில் : ஐ.எஸ்.டி. கான்ஃபெரன்ஸ்
மறந்து போனது : பாஸ்போர்ட்டுக்கு மீசை வரைவது, குதிரைவண்டி சவாரி...
மறக்காதது : பரோட்டாவும் (முட்டலாப்பா ? ) கோழிக்கறியும்
மாறிவரும் அடையாளம் : வெள்ள துப்பட்டி டு புர்கா.
மாறாத அடையாளம் : பாயடி கைலி
ஹீரோக்கள் : பயணத்திலிருந்து வருபவர்கள்
வில்லன் : குடிகெடுக்கும் டாஸ்மாக்
சமீபத்திய சாதனை : சுனாமியின்போது தன்னலமற்ற உடனடி சேவை
நீண்டநாள் சாதனை : மதநல்லிணக்கம்
முக்கிய வருமானம் : உள்நாட்டிலிருந்து இல்லை.
பிடித்த வேலை : முச்சந்தி தோறும் வெட்டி
பிடிக்காத வேலை : வேறென்ன, ஊரில் வேலை செய்றதுதான்...
பிடித்த பொருள் : செல்போன்.
பிடித்த பிக்னிக் ஸ்பாட் : ஏர்போர்ட்.
பொழுது போக்கு : பிஸினஸ் துவங்கி பார்ப்பது
சொல்லிப்பெருமைப்படுவது : இல்லாமல் போன இரும்பு ஆலை
சொல்லாமல் இருப்பது : வேலைவாய்ப்புக்கு ஒரு முகாந்திர மையமும் இல்லாதது.
ஆறுதலுக்குரிய சாதனை : பெண்களின் கல்வி
தேறுதல் கூட இல்லாத சோதனை : மாணவர்களின் கல்வித்தரம்
சமீபத்திய அதிர்ச்சிதரும் போக்கு : சிறுவர்களும் டாஸ்மாக்கில்...
சமீபத்திய ஆறுதல் தரும் போக்கு : இந்த வருடம் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு 3 பேர் முயற்சி
நல்ல பழக்கம் : சலாம் சொல்வது
கெட்ட பழக்கம் : குறை சொல்வது
தேசிய வாகனம் : ஆட்டோ
தேசிய தொழில் : டிரைவிங், ஆபிஸ் பாய் (உள்ளூர் & வெளிநாடு)
தேசிய உணவு : தால்ச்சா சோறு
தேசிய விழா : அக்கியாஸ் தக்கா சந்தல்
காமெடி டைம் : அரசியல் பொதுக்கூட்டங்கள்
சமீபத்திய சந்தோஷம் : பள்ளிகூடம், ரோடு, மருத்துவமனை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள்
நீணடநாள் சந்தோஷம் : வாரம் 2 நாள் விருந்து (தாவத்)
இப்போ அப்போ கனவு : வெள்ளாற்றுப்பாலம்
எப்போதைக்குமான கனவு : ஒரு கல்லூரி, ஒரு ஐ.ஏ.எஸ்.
என்னக் கொடும சார் இது : வெளிநாட்டு வாழ் சகோதரர்கள்...

8 கருத்துகள்:

  1. சிரிச்சிகிட்டே சிந்திக்கவும் வைத்த பதிவு ரொம்ப நல்லாருக்கு Abuprincess.

    பதிலளிநீக்கு
  2. இஸ்லாத்திற்கு எதிரான சில வார்த்தைகள், எண்ணங்கள் ....நீக்கி இருந்தால்

    மிகவும் நன்றாக இருக்கும்....

    பதிலளிநீக்கு
  3. டியர் Student of Knowledge
    // இஸ்லாத்திற்கு எதிரான சில வார்த்தைகள், எண்ணங்கள் .... // அவை என்ன என்று குறிப்பிட்டால் மாற்றி கொள்ளலாம் தனி மெயிலில் குறிப்பிட்டாலும் சரியே நன்றி

    பதிலளிநீக்கு
  4. டியர் Student of Knowledge
    // இஸ்லாத்திற்கு எதிரான சில வார்த்தைகள், எண்ணங்கள் .... // அவை என்ன என்று குறிப்பிட்டால் மாற்றி கொள்ளலாம் தனி மெயிலில் (abuprincess@gmail.com) குறிப்பிட்டாலும் சரியே. நன்றி

    பதிலளிநீக்கு
  5. Dear muslim,
    // சமீபத்திய அதிர்ச்சிதரும் போக்கு : சிறுவர்களும் டாஸ்மாக்கில்... //
    டாஸ்மாக் என்பது மக்களுக்கு நலம் நாட வேண்டிய அரசாங்கமே தனது குடிமகன்களுக்கு ஊத்தி குடுக்கும் இடம் (அரசு மது பான கடை) இப்போது சிறுவர்களும் அங்கே காண படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. Jazakallah brother abu princess.

    May Allah protect our youths ameen

    wasalam

    பதிலளிநீக்கு
  7. டியர் Student of Knowledge
    // இஸ்லாத்திற்கு எதிரான சில வார்த்தைகள், எண்ணங்கள் .... // அவை என்ன என்று குறிப்பிட்டால் மாற்றி கொள்ளலாம் தனி மெயிலில் (abuprincess@gmail.com) குறிப்பிட்டாலும் சரியே. நன்றி

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...