பொலிவான முன்புற தோற்றம்
மொத்தம் உள்ள இருபத்து எட்டு செகஷன்களில் பதினாறு ரூம்கள்தான் புதிய கட்டிடத்தில். மீதி எல்லாம் கொஞ்சம்
சரியற்ற பழைய கட்டிடங்கள். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டே ஆக வேண்டிய நிலைதான். குறிப்பாக முன்னாள் கம்ப்யூட்டர் கட்டிடம்.
ஆங்கில வழி வகுப்புக்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களாவது தற்போது தேவை.
இத்தனை மாணவிகள் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு முறையான ஒரு நூலகம் இல்லை என்பது இன்னொரு அவலம். இதை போக்க பள்ளியின் முதல்வர் ஒரு புதிய முறையை கையாளுகிறார். அதாவது, பிறந்தநாள் என்றோ விசேஷம் என்றோ லீவ் கேட்டு வரும் பிள்ளைகளிடம் அவர்களாகவே முன்வந்து சில நூல்களே பள்ளிக்கு அன்பளிப்பாக தருவதற்கு அன்பாக ஊக்கமளிக்கிறார். இப்படி சேகரிக்கப்படும் புத்தகங்கள் வகுப்பு தோரும் சுற்றுக்கு விடப்படுகின்றன.
நல்ல யோசனைதான்.
இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகுப்புக்கும் தலா ஒரு டிக்ஷனரி தற்போது உள்ளது.
பள்ளிக்கு முறையான பரிசோதனை கூடம் உள்ளது. உபகரணங்களில் கொஞ்சம் தன்னிறைவு தேவை.
குட்டிச்சுவர்
சீர் படுத்தப்படவேண்டிய கழிவறை
மொத்தம் ஆயிரத்தி ஐந்நூறு பிள்ளைகளுக்கு பத்து யுரினல்களும், இரண்டு கழிவறைகளும்தான் உள்ளன. (ஆசிரியர்களுக்கும் சேர்த்து). மேலும் கழிவறை பக்கமுள்ள மிக குட்டியான சுவர் ஒன்று (முன்னால் பள்ளி இருந்தபோது மாணவர்கள் ஏறி குதித்து முத்தைய முதலி தெரு வழியாக எஸ்கேப் ஆக வசதியாக இருந்த சுவர்) அபாய எச்சரிக்கை ஒலித்தவாறு கிடக்கிறது. வெளியார்களின் அத்துமீறல் தவிர்க்கப்பட, கண்டிப்பாக அந்த குட்டி சுவர் உயர்த்தபட்டே ஆகவேண்டும். (பார்க்க: படங்கள்)
ஊரில் இத்தனை ஆங்கில பள்ளிகள் இருந்தும் தங்கள் பெண் பிள்ளைகளை நமது தாய்மார்கள் இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் இல்லை. பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஒழுங்குகளும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
பள்ளி செயல்பட துவங்குவதற்கு முன்னாள் பள்ளியின் இரு புறத்திலும் வாடகை வாகனங்கள் நிறுத்தி வைத்து இருந்தார்கள். இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் நெருக்குதலின் பேரில் அவை போலீசாரால் அப்புறபடுத்தப்பட்டன . ஆனாலும் தற்போதும் சில வாகனங்கள் அவ்வப்போது அங்கு ஸ்டாண்ட் அமைத்து நின்று வருகின்றன. (பார்க்க: படங்கள்).
மேலும் தேவையே இல்லாமல் அங்கு சுற்றி வரும் ஊர்குருவிகளுக்கு தடுப்பு வலை போட (பெண்) போலீஸ் காவல் அவ்வப்போது அந்த இடத்தில் தேவை என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு. நிறைவேறுமா?
பள்ளியின் முன்புறம் தனியார் வாகன நிறுத்தம்
பிள்ளைகள் அனைவரும் - குறிப்பாக கல்வியில் பின்தங்கிய சமுதாயமாக பார்க்கப்படும் முஸ்லீம் பெண் பிள்ளைகள் - படிப்பில் முத்துக்களாக ஜொலிக்கிறார்கள் என்று தனது மாணவர்களை மெச்சிக்கொள்ளும் முதல்வர், அவர்களை படிப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக ஊர் பொது மக்கள் சார்பாக பரிசுகள் எதுவும் பெரிதாக வழங்கபடுவது இல்லை என்ற தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார்.
இது விஷயத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் முயற்சிகளை வெகுவாக பாராட்டிய பள்ளி முதல்வர், பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் இந்த பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வேலைகளில் இருந்து திறப்பு விழா முதற்கொண்டு அனைத்து வகையிலும் சிரமம் பார்க்காமல் ஒத்துழைத்த விதத்தினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
ஆனால் அரசு மட்டும் இது போன்ற பெரும் காரியங்களில் முழுமை செய்ய முடியாது தான். நன்றாக படிக்கும் , விளையாட்டில் , கலையில் , போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு பல ஊர்களில் இருப்பது போல அறக்கட்டளை அமைத்து வருடா வருடம் அவர்களுக்கு ஊக்கப்படுத்தி சிறப்பிக்கலாமே. இது போன்ற எண்டோவ்மேன்ட்கள் (endowments) இது வரை ஊரில் ஒன்று கூட இல்லை என்பது வேதனைகுரிய விஷயம்தான்.
ஊரில் உள்ள பெரும் தனவந்தர்கள் அவர்கள் பெயராலோ அல்லது அவர்களின் முன்னோர் பெயராலோவாவது ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி இது போல் உதவலாமே?
இந்த செய்தியை படிப்பவர்கள் பிரயோஜனமாக எதையேனும் செய்தால் அல்லது யாரிடமாவது சொல்லி நல்லது செய்ய தூண்டினால் புண்ணியம். செய்வோமா?
ஆக்கம் : ஹமீது மரைக்காயர் - ஜெனிபாஹ்
தகவல்கள் நிறைந்த நல்லதொரு பதிவு.
பதிலளிநீக்குபாதுகாப்பற்ற "குட்டி சுவர்" மற்றும் கழிவறை வசதிகள் உடனே கவனிக்கபடவேண்டும். நிலையான நன்மையை தரும் இவ்வசதிகளை செய்ய தனவந்தர்கள் முன் வருவார்களாக!
ழைய ஸ்கூலில் கழிவறை பிரச்சனை இருந்தது. இந்த புது ஸ்கூலில் ஆவது இருக்காதுன்னு பார்த்த இங்கேயுமா?
பதிலளிநீக்குஏதேதோ விஷயத்துக்கெல்லாம் காச கொட்டி செலவழிக்கும் பெரியவர்கள் இந்த மாதிரி பிரயோஜனம் உள்ள உதவிகளை செய்ய முன்வரட்டுமே. அட அட்லீஸ்ட் ஒரு கல்யாணத்த சிம்பிளா முடிச்சிட்டு மிய்யிர காச வெச்சி ஒரு கிளாஸ் ரூம் கட்டி கொடுக்கலாமே...
சிந்தனையை தூண்டும் சிறந்த பதிவு ஹமீத். புதுப்பொலிவு நிறைவாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அவலங்கள், நாற்றங்களாக மாறுமுன் களையப்பட வேண்டும்.
பதிலளிநீக்குகுறிப்பாக, உடனடியாக பள்ளிக்கு முன் நிற்கும் வாகனங்கள், ஊர் சுற்றும் வெட்டிச் சோறுகள் அகற்றப்பட வேண்டும்.
கல்வித்தரம், தேவைகள் குறித்து பள்ளி முதல்வரிடம் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டால் நல்லது.
சிறப்பான தகவல். பள்ளியின் சிறப்பம்சங்களையும், குறைபாடுகளையும் தொகுத்து வழங்கப்பட்டிருப்பது நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குபள்ளி பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் முகமாக ஓர் அறக்கட்டளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். அதையும் நமது ஐக்கிய ஜமாஅத் தலைமையில் செயல்படுத்துவது நன்றாக இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.
அறக்கட்டளையை உருவாக்குவோம்...! பிள்ளைகளின் திறமைகைள ஊக்கப்படுத்துவோம்...!!
அறக்கட்டளை ஒன்றை உருவாக்கினால் அதை அனைத்து பள்ளிக்கும் பொதுவாகவே நமது ஜமாஅத் உருவாக்க வேண்டும் அதாவது அரசு ஆண்கள் பள்ளி அரசு பெண்கள் பள்ளி, கும்மத் பள்ளி ஸ்கூல் எளிமண்டரி ஸ்கூல் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவாக் அல்லது தனித்தனியாக ஒவ்வொரு பள்ளிக்கும் செயல்படுத்தலாம் நன்றாக படிக்கும் பிள்ளைகள் இதனால பயனடயகூடும்
பதிலளிநீக்குஆனா ஏன் இன்னும் ஒருவர் கூட உதவ முன்வரவில்லை ?
//தனது மாணவர்களை மெச்சிக்கொள்ளும் முதல்வர், அவர்களை படிப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக ஊர் பொது மக்கள் சார்பாக பரிசுகள் எதுவும் பெரிதாக வழங்கபடுவது இல்லை என்ற தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார்.//
பதிலளிநீக்குபொதுத்தேர்வுகளில் ஊரில் முதலிடங்களைப் பிடித்த மாணவ/மாணவியர்களுக்கு IEDC பரிசளித்து வந்தது. பின்னர் ஜமாஅத்தும் ஒன்றிணைந்து அதன் தலைமையின் கீழ் தொடர்ந்து நடந்தது. நிறுத்தப்படாமல் தொடரப்படும் என்று ஜமாஅத் தலைவரும் வலைப்பூ நேர்காணலில் தெரிவித்திருந்ததாக நினைவு.
இத்திட்டத்தை மேலும் மெருகேற்றி மாணவ/மாணவியர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கப்படவேண்டும்.
இதற்காக சம்பந்தப்பட்டவர்களோ, ஜமாஅத்தோ 'NRP' (Non Resident Portonovian)களை அணுகலாம் என்பது என் ஆலோசனை.
Assalamu Alaikum,
பதிலளிநீக்குThank u for information
THOUWHEED
சேவை மனப்பான்மை உள்ள நல்ல பெற்றோர் ஆசியர் கழகம் தேவை.
பதிலளிநீக்குகட்டுரை நல்லா இருக்குது. எல்லாம் சொன்னீங்க சரி ரோட்டுல போனாக்க எட்டி பார்த்தாலே கிளாசு ரூமு தெரியுதே அத பத்தி ஏன் எழுதல? ஜமாஅத் செயலாளரும் லயன்ஸ் க்ளப்பும் சேர்ந்து நாலு வெரக்கட (இஞ்சு) உயரத்துக்கு சுவர் தூக்குனத நோட்டீஸ் அடிச்சு பங்கு உட்டாங்களே அத சொல்லுனமேன்னுட்டா ? சொவத்த தூக்குங்கப்பா...
பதிலளிநீக்குஅப்பாலே ஒரு விஷயம்.... ஊர் குருவிலாம் வெளில சுத்துறத பத்தி எழுதி இருந்திங்கள்ள குருவி இல்ல பெரிய்ய பறாந்து எல்லாம் ஸ்கூல சுத்தி எப்ப பார்த்தாலும் நிக்குது அதையும் கொஞ்சம் கவனிக்க சொல்லுங்கப்பு.