பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 30 நவம்பர், 2008

குற்றம் காணின் சுட்டுவதும், நிறை காணின் ஷொட்டுவதும் மீடியாவின் மரபாமே என்று குட்டி (குட்டாத) கவிதை சொல்கிறது.

கடந்த நோன்பு பெருநாள் அன்று வழ்க்கமான ஐந்து மணி நேர மின்வெட்டுக்கு பதில் எட்டு மணி நேரம் மின்சாரத்தை வெட்டிய மின்துறையை பற்றி கண்டன பதிவு வெளியிட்டிருந்தோம். தற்போது அதே மின்சார துறை சிறப்பாக செயல்பட்டதற்காக மனதார பாராட்டுகிறோம்.
கடும் மழை, புயல் காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்திருந்த நிலையில் அவைகளை மிக துரிதமாக செயல்பட்டு சரி செய்து மிக விரைவாக மின் இணைப்பு வழங்கிய மின் துறை அதிகாரிகளயும், ஊழியர்களையும், ஊர் மக்கள் சார்பாகவும், வலைப்பூ சார்பாகவும் மனதார பாராட்டுகிறோம்.
இது அவர்களின் பணி தான். ஆனால், கடலூர் சிதம்பரம் போன்ற பெரிய ஊர்களிலேயே மூன்று நாட்கள் கழித்தே மெது மெதுவாக மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் நமது ஊரின் சில இடங்களில் முற்றிலும் சீர் குலைந்து போயிருந்த பவர் கேபிள்களை சீர்செய்து இத்தனை விரைவில் இயல்பு நிலையை திருப்புவார்கள் என்று யாருமே நம்பவில்லை. நிச்சயம் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள் தான்.

5 கருத்துரைகள்!:

ஊர் நண்பன் சொன்னது…

பொறுப்புடன் சுருசுருப்பாக இயங்கி, ஊரை "ஒளி"யில் இயங்க வைத்த அவர்களை நாமும் மனதார பாராட்டுகிறோம்.

பரங்கிப்பேட்டை சகோதரர்கள் (வெளிநாடு)

இப்னு இல்யாஸ் சொன்னது…

நெசமாவா சொல்றீங்க abuprincess!!!!!!!
அப்படினா அவசியம் பாரட்டப்பட வேண்டியர்கள் இந்த
மின் வாரியகாரர்கள்.

Vajhi Bhai சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்

வலைப்பூ சார்பாகவோ அல்லது குழுமம் சார்பாகவோ ஒரு நன்றி கடிதத்தை அனுப்பினால், அவர்கள் பாராட்ட பட்டதை அவர்களே அறிவார்கள்.

வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்

பாபு சொன்னது…

கரெண்ட்டு வந்து பல்பு எரிஞ்சதுக்கு அவிங்களுக்கு (அதாங்க, ஸ்பைடர்மென்) தேங்க்ஸ்ஸூங்க,

அப்புறம், அபுபிரின்ஸு, நல்ல ஒரு மீடியாமேனா ஆயிட்டுவர்றீங்கன்னும் ஒரு 'பல்பு' எரியுதே.. Keep it uppppppppppp!

ஹம்துன்அஷ்ரப் சொன்னது…

தேனீயை போன்றூ சுறூசுறூப்பாக செய பட்டு மின்சாரம் வழங்கிய பரங்கிப் பேட்டை மின்சார வாரியத்தின் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்

அன்புடன்
ஹம்துன் அஷ்ரப்
பரங்கிப் பேட்டை

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234