ஞாயிறு, 9 நவம்பர், 2008

வருங்கால மருத்துவரை வாழ்த்துவோம்

கலைகழகம் நடத்திய கிராம அளவிலான போட்டிகளில், பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த நமது பரங்கிபேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஹபீபா ஜுலைக்கா ஜமாலுதீன் அவர்கள், சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் முதல் பரிசை வென்றார். பள்ளியில் நடைபெறும் அனைத்து தேர்வு மற்றும் போட்டியிலும் (தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி\ கட்டுரை போட்டி) பெரும்பாலும் முதலிடம் பிடிக்கும் இந்த மாணவி, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்விலும் பள்ளி முதல் மாணவியாக வந்து நமது ஜமாஅத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கைகளால் சிறப்பு பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விலும் மாநிலத்திலேயே முதலிடம் பெற முயற்சித்து வருகிறேன் என்று நம்பிக்கையுடன் சொல்லும் இந்த சகோதரி ஒரு டாக்டர் ஆகி தன் சமூகத்திற்கு சேவை புரிவதை தனது லட்சியக்கனவாக கொண்டுள்ளார். (இன்ஷா அல்லாஹ்).
கல்வி குழு சார்பாக நாம் பேட்டி எடுத்த எத்தனையோ சகோதரிகளிடம் மேற்கொண்டு படிக்கும் ஆர்வத்தையே அரிதாக நாம் காணும் நிலையில் இத்தனை உயர்ந்த லட்சியம் கொண்டு இயங்கும் இந்த சகோதரியின் பின்புலம் தான் என்ன என்று பார்க்க போனால் ..... அந்த சகோதரியை முழு அளவில் ஊக்கப்படுத்தி அவருக்காக தியாகங்கள் பல புரிந்து கனவு காணும் அவரின் அன்பு பெற்றோர்கள் தான்.

இவருக்காக நாம் செய்ய வேண்டியது அவரின் கனவு லட்சியத்திற்கு (சமுதாயத்தின் லட்சியமும் அதுதான்) நமது மதிப்பு மிக்க பிரார்த்தனைகளும் நல் வாழ்த்துக்களும் தான் இன்ஷா அல்லாஹ் .
செய்வோமா?

9 கருத்துகள்:

  1. Assalamu alaikum,

    insha allah, I can help financially in little ways that i can.

    Please keep us posted.

    பதிலளிநீக்கு
  2. பரிசும், பாராட்டும் பெற்ற மாணவியை வாழ்த்தி,அவரின் லட்சியக்கனவுகள் நிறைவேறிட பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. "பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு பெண் டாக்டர்" மாணவியின் கனவு நிறைவேற இறைவன் துணைப்புரிய வேண்டும்.

    எங்கள் ஒத்துழைப்பு என்றைக்கும் உண்டு இன்ஷா அல்லாஹ்

    பதிலளிநீக்கு
  4. டாக்டர் ஆகி சமூகத்திற்கு சேவை புரிவதை தனது லட்சியக்கனவாக கொண்டுள்ள(இன்ஷா அல்லாஹ்).ஹபீபா ஜுலைக்கா ஜமாலுதீன் அவர்களே! பிரார்த்திக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  5. இன்ஷாஅல்லாஹ் சகோதிரியின் லட்சியம் நிறைவேற துவா செய்கிறேண்.

    பதிலளிநீக்கு
  6. Congratulation and best wishes for your great ambition. Insha-Allah I pray that Allah (SWT) will guide you and make your task easy Ameen.

    Noor Mohamed,UAE

    பதிலளிநீக்கு
  7. பொதுப்புத்தி, சமூகத்தின் மனத்தடை, பி/புறக்காரணிகள் ஆகியனவற்றைக் எதிர்நீச்சலில் கடந்தே கல்வியில் இன்றைக்கு முஸ்லிம் சமுதாய பெண்கள் சாதிக்கவேண்டியுள்ளது. அவ்வகையில் இம்மாணவி மிகவும் பாராட்டுக்குரியவர்.
    மாணவியின் இலட்சியம் நிறைவேறி சமூகநற்பயன் விளைக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்திய சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. சகோதரர் முஸ்லீம் (muslim) அவர்கள் பின்னாளைய தொடர்புக்களுக்காக தங்களது தொடர்பு விவரங்களை mypnonews@gmail.com என்ற ஐ டி க்கோ அல்லது abuprincess@gmail.com என்ற ஐ டி க்கோ தயவு செய்து அனுப்பி வைத்து உதவவும்.
    அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...