பாபரி மஸ்ஜித் கொடியவர்களால் இடிக்கப்பட்ட தினம். அந்த கொடுமையான நிகழ்வு குறித்த தங்களது எதிர்ப்பையும், அதை மீண்டும் மீட்கும் முஸ்லிம்களது வேட்கயினையும் பரங்கிபேட்டையின் இஸ்லாமிய அமைப்புக்கள் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பரங்கிபேட்டைஇலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் விருதாச்சலத்தில் நடத்திய ரயில் மறியல் போராட்டத்திலும் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் இது போன்ற நிகழ்வுகளில் மௌனமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் ஜமாத்துல் உலமா பேரவையினர் பாபரி மஸ்ஜித் நினைவு சிறப்பு கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். இதில் மௌலான மௌலவி ஹாஜா முயனுதீன் மிஸ்பாஹி, மவ்லானா லியாகத் அலி மன்பயீ, மவ்லவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பல உலமாக்கள் கலந்து கொண்டு பாபரி மஸ்ஜித் பற்றிய அடிப்படை தகவல்கள், முழுமையான வரலாறு, தற்போதைய நிலை, நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய பல விளக்கங்களை அளித்தனர்.
மார்க்க சடங்கு விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி மக்களின் மற்ற பிரச்சனைகளை கண்டுக்கொள்ளதவர்கள் என்று மற்ற கொள்கை சகோதரர்களால் பொதுவாக கூறப்படும் உலமா பெருமக்களின் இந்த பொருள் பொதிந்த சரியான முன்னெடுப்பு மனதிற்கு இதம் தருவதாக மக்கள் கருதுவதை காண முடிந்தது.
தமுமுக நடத்திய போராட்டத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கலந்து கொண்டது,மனித நேய மக்கள் கட்சியில் சேர போகிரார்கள் போல் தெரிகிறது.யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
பதிலளிநீக்குஒரு பக்கம் ஆர்பாட்டங்கள் மறியல்கள். மறுபக்கம் அமைதி வழியில் கருத்தரங்கம் "பாபரி மஸ்ஜித்"நினைவு நாளை நம்மவர்கள் கடைப்பிடிக்கும் விதம் ஏதோ (மறந்து போன) வருஷ ஃபாத்திஹாவை ஞாபகப்படுத்து போன்றுதான் உள்ளது.
பதிலளிநீக்குபாபர் மசூதி மீட்பு என்னும் ஒரே காரணத்துக்காக தமிழக இயக்கங்கள்
பதிலளிநீக்குதனித் தனியே ஆர்ப்பாட்டங்களும்,மறியல்களும்,கூட்டங்களும் நடத்துவதன் நோக்கம்தான் என்ன???இயக்கவாதிகள் பதில் சொல்வார்களா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
பதிலளிநீக்குசம்பிரதாயத்திற்கான ஆர்ப்பாட்டங்களும் மாநாடுகளும் என்றுமே பலனளிக்கப்போவதில்லை.
கலைஞருக்கு கண்ணகி சிலை போல இந்த இயக்கவாதிகளுக்கு டிசம்பர் 6. அவ்வளவுதான்.