திங்கள், 8 டிசம்பர், 2008

கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் ஐம்பெரும் விழா

கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நேற்று காலை பத்து மணிக்கு மீராபள்ளி தெருவில் நடைபெற்றது. இதில் கிரசன்ட் துணை தலைவர் காமில் அவர்கள் தலைமை தாங்கினார். கிரசன்ட் புதிய அலுவலக கட்டிடத்தினை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் திறந்து வைத்தார்கள். புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் கிரசன்ட் இன்போ டெக் ஐ திறந்து வைத்தார். கிரசன்ட் நூலகத்தை, சங்கத்தின் முன்னாள் தலைவர் கவுஸ் ஹமீது அவர்களும் ஜமாஅத் துணை தலைவர் ஹாஜா கமால் அவர்கள் ஏழைகளுக்கு அரிசியும் வழ்ங்கினார். பரங்கிபேட்டை முஸ்லீம் அசோசியேஷன், ஜித்தாவின் பொருளாளர் முஹம்மது கவுஸ் மரைக்காயர் அவர்கள் மரக்கன்டினை நட்டார்கள்.
விழாவில் வழக்கம் போலவே சுவை பட பேசி வருகையாளர்களை கவர்ந்த அண்ணாமலை பல்கலைகழக கடல் வாழ உயிரின ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர் கதிரேசன் அவர்கள் பரங்கிபேட்டையில் விரைவில் ஒரு ஐ. ஏ.எஸ் உருவாக வேண்டும் மற்றும் மகளிர் கல்லூரி ஒன்று வர வேண்டும் என்ற தனது விருப்ப கனவினை வெளியிட்டார். இதனை பற்றி அங்கு மேடையில் அமர்ந்திருந்த முஹம்மத் யூனுஸ் மற்றும் செல்வி ராமஜெயம் ஆகியோர் குறிப்புக்களை எடுத்து பேசியது நமக்கு சில நல்ல வருகைக்கான சில அடையாளங்களை காண்பித்தது.
விழாவில் திரளான மக்கள் மற்றும் கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தின் முன்னாள் இந்நாள் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

11 கருத்துகள்:

  1. சமுக பணியில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் வயது பதினைந்தா?! மாஷா அல்லா.மக்கள் பணியில் பல்லாண்டுங்கள் இச் சங்கம் வெற்றி நடைப்போட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இது என்னா நியாயம் என்று புரியவில்லை? இந்த புதிய ஆபிஸ் தொறநறந்து ஒருவசடம் ஆகிவிட்டது. இந்த புதிய ஆபிஸில் பல பங்க்குசன்ஸ் கூட நடந்துவிட்டது. இன்போடெக் என்பது சுனாமி டைமில் நிவாரனம் நடந்த போது ஓல்டு விசன் ஹெல்புடன் பழைய காஜியார் சந்தில் துவங்கப்பட்டது. அதைகூட ஏற்கனவே அறிவிப்பும் செய்துவிட்டீர்கள். எல்லாம் முடிந்து ஆருன கன்சி பலங்கன்சி என்பதுபொல சுயவிளம்பரம் கருதி இந்த 5பெரும் விழா என்கிற கூத்து அரங்கெறியுள்ளது. இதை ஒரு செய்தி என்று இந்த வெப்சைட்டும் சுயவிளம்பரத்திற்கு வெளியிட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  3. சகோ மீராப்பள்ளி அவர்களுக்கு..

    அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகி இருக்கிறது. இதற்க்கு முன்னர் இந்த அலுவலகத்தை official ஆக திறக்கப்பட்டதை நீங்கள் எங்கு பார்த்தீர்கள்?

    இந்த புதிய அலுவலக்த்தில் சுதந்திர திணம் மற்றும் குடியரசு திண கொடியேற்றம் தவிர எத்தனை பங்சன்கள் நடந்துள்ளது? வரிசை படுத்த முடியுமா?

    உங்களை மாதிரி வசதி படைத்தவர் நிதியுதவி அளித்தால் ஒவ்வொன்றுக்கும் தணி பங்சன் வைக்கலாம். சுய விளம்பரத்தை நாடுபவர்காளாக இருந்தால் 15 வருடம் பொது சேவையில் நிலைத்திருக்க முடியாது.

    விளம்பரத்தை நாடுவது நாங்களல்ல!! ஆருன கன்சி பலங்கன்சினு எதுவும் பேச நல்லா இருக்கும். முதலில் உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகுங்க மீராப்பள்ளிக்கு பதிலாக.

    தாரிக்
    சிங்கையிலிருந்து..

    பதிலளிநீக்கு
  4. சகோ மீராப்பள்ளி அவர்களுக்கு..

  5. சகோ மீராப்பள்ளி அவர்களுக்கு..

  6. இந்த கட்டிடம் திறந்து சில மாதங்கள் ஆகின்றன ஆனால் இது வரை துவக்க விழா நடைபெறவில்லை. அந்த சங்கம் 1993 ஆம் ஆண்டு துவக்க பட்டது.14 ஆண்டுகள் கடந்து 15 ஆண்டில் நமதூரில் தனகென ஒரு புதிய கட்டிடத்தை கட்டிய முதல் சங்கம். அவர்கள் விழா நடதுனத்தில் தவறு ஒன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. இந்த கட்டிடம் திறந்து சில மாதங்கள் ஆகின்றன ஆனால் இது வரை துவக்க விழா நடைபெறவில்லை. அந்த சங்கம் 1993 ஆம் ஆண்டு துவக்க பட்டது.14 ஆண்டுகள் கடந்து 15 ஆண்டில் நமதூரில் தனகென ஒரு புதிய கட்டிடத்தை கட்டிய முதல் சங்கம். அவர்கள் விழா நடதுனத்தில் தவறு ஒன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  8. இந்த கட்டிடம் திறந்து சில மாதங்கள் ஆகின்றன ஆனால் இது வரை துவக்க விழா நடைபெறவில்லை. அந்த சங்கம் 1993 ஆம் ஆண்டு துவக்க பட்டது.14 ஆண்டுகள் கடந்து 15 ஆண்டில் நமதூரில் தனகென ஒரு புதிய கட்டிடத்தை கட்டிய முதல் சங்கம். அவர்கள் விழா நடதுனத்தில் தவறு ஒன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  9. ஆறிய கஞ்சி பழைய கஞ்சியாக இருந்தாலும் அதன் சுவையே தனிதான்.சமுக சேவையில் நாட்டமுள்ள அமைப்புக்களை நாம் வரவேற்க்கனுமே தவிர குறைகளை சொல்லிக்கொண்டிருந்தால்..? சமுக பணியில் தேக்கநிலைதான் ஏற்படும்.

    பதிலளிநீக்கு
  10. மீராப்பள்ளி என்கிற பெயரில் எழுதியுள்ள சகோதாரருக்கு. இதை சுய விளம்பரம் என்று யாரையும் சொல்லி தாங்கள்தான் தற்போது விளம்பரம் செய்து வருகிறீர்கள். தங்களின் கருத்திற்கான மறுப்பும் விளக்கமும் தற்போது பெற்றுவிட்ட நிலையில், இனிமேலாவது சொந்த பெயருடன் தங்கள் கருத்தினை பதிவிடுங்கள். தேவைப்பட்டால் விவாதம் செய்யலாம். நன்றி.
    - ஆசிரியர் குழு.

    பதிலளிநீக்கு
  11. ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

    இது போன்ற விவாத கருத்துகளை (புனை பெயரில் வரும் கருத்துக்களை) வலைபூவில் பதிவிடாமல் இருப்பதே மேல் என்று கருதுகிறேன். எந்த ஒரு அமைப்பின் நல்ல செயலையும் - ஊரின் வளர்ச்சியில் அக்கறை காட்டுபவர்களையும் பாராட்டாமல் இருந்தாலும் பரவா இல்லை குறை கூறுவதை வலைப்பூவில் பதிவிடாமல் இருப்பது நல்லது.

    அன்புடன்

    ஹ. முஸ்தபா (அபூ ஸுஹைலா)
    பரங்கிபேட்டை

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...