பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 9 டிசம்பர், 2008

இறைவனின் மாபெரும் கிருபை இந்த ஹஜ் பெருநாளில் கொஞ்சம் அதிகமாகவே பொழிந்தது போலவே தெரிகிறது. காரணம் இந்த பெருநாளின் ஹீரோவான மிஸ்டர் மழை.

கொட்டும் மழையிலும் ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் முயன்று (நீந்தி) வந்து மிக திரளான பெண்கள் (தனியாக ஷாதி மஹாலில் நடைபெற்ற) தொழுகையில் கலந்து கொண்டனர்.

இஸ்லாத்தின் வலிமையான கூறாகிய ஜும்ஆ பேருரையை மக்களின், சமுதாயத்தின் முன்னேற்றம், கல்வி, நடைமுறை தொழில் நுட்ப வளர்ச்சி, பிரச்சனைகளை பற்றி, ஆரோக்கியமான தீர்வுகளை பற்றி மற்ற பிரயோஜன விஷயங்களை பற்றி, யதார்த்தமாக பேசாமல் எத்தனை காலம்தான் இன்னும் துல்ஹஜ் பிறை பதிமூன்றைமுக்காலின் பெருமைகளையும், ஆட்டை அறுப்பது எப்படி என்றும் பேசி நம்மை தாலாட்டப்போகிறார்களோ என்ற அயர்ச்சி ஏற்பட்டது.

போதாக்குறைக்கு முன்பு ஹதீஸ் அடிப்படையில் முதல் ரக்கஅத்தில் ஒன்று ப்ளஸ் ஏழு, இரண்டாம் ரக்கஅத்தில் ஒன்று ப்ளஸ் ஐந்து என்றபடி தக்பீர் இல்லாமல் மத்ஹப் அடிப்படையில் ஒன்று ப்ளஸ் நான்கு இரண்டாவது ரக்கஅத்தில் ருகுவிற்கு பிறகு நான்கு தக்பீர்கள் என்று முரணாக தொழ வைத்ததை பற்றி பரவலாக முனுமுனுப்பு எழுந்தது.

தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் தழுவி தங்களின் அன்பையும் பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்ட சகோதரர்கள் பலரின் கண்களில் பணிக்கும் ஈரம். சிலர் தனியே சென்று உணர்வு பெருக்கில் அழுததையும் காண முடிந்தது.

நீங்க பாட்டுக்கு தொழுவுங்க நா பாட்டுக்கு பெய்யிறேன் என்றபடி கறந்து கட்டிய மழை, தொழுகை முடிந்த உடன், நமக்கு சற்று இடைவேளை விட்டதால் வேலை பொழைப்பை கவனிக்க மக்கள் கலைந்து பரவி சென்றனர்.
பள்ளியின் மாடியில் அனைவரும் சென்ற பின்னரும் தனியே சஜ்தாவில் வீழ்ந்து துஆ செய்து கொண்டிருந்த ஒரு அடியார்.... (அவரை தொந்தரவு செய்யாமல் எடுத்த படம் மேலே... ) அவர் இறைவனிடம் என்ன கோரினாரோ அதை இறைவன் அவருக்கு வழங்கிட நாமும் துஆ செய்வோம்.
ஆங்காங்கே நான்கு செண்டிமீட்டர் கைலி, இரண்டு செண்டிமீட்டர் சட்டையும் என பெருநாள் புத்துடைகள் தந்த பெருமை பொங்க சிறார்களும் சிறு குழந்தைகளும் அவரவர் உலகங்களில் அற்புதமாய் சஞ்சரித்துக்கொண்டு.....
எத்தனை கோடி இன்பங்கள் தந்தாய் இறைவா ..... அத்தனைக்கும் நன்றி சொல்ல பொழுதுகள் தகுமோ...

15 கருத்துரைகள்!:

Maanavan சொன்னது…

அடாத மழைஎளும் கடமைய கருத்தாக புகைப்படம் எடுத்து யங்களை மகிழ்வித்த அபுப்ரின்செச்ஸ் இகு நன்றி

Maanavan சொன்னது…

இதே போன்ற மகிழ் வான நிலைல் நம் அனைவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் புகசைவானாக

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்

மீரா ஜமால் சொன்னது…

தியாக திருநாளின் தொழகை படம் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது,அந்த "மழழையின்"சிரிப்பு புது கவிதையாய் இருந்தபோது,ஹஜ்ரத்தின் சொற்பொழிவு மரபுக்கவிதையாய் இருந்தது.

இப்னு இல்யாஸ் சொன்னது…

பதிவ சுவாரஸ்யமா தொகுத்திருக்கீங்க abuprincess.வாழ்த்துக்கள்.

மஹ்மூது பந்தரான் சொன்னது…

இமாம் நல்ல பேச்சாளர்,ஆனால் யானைக்கும் அடி சருக்கும் என்பார்கள்,இன்றய பேச்சில் சுவாரிசயம் இல்லை.மேலும் நமதூருக்கு ஷாபி அல்லது அஹ்லே ஹதீஸ் இமாம் தான் தேவை.

mohammad சொன்னது…

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அபூ பிரின்சஸ்

தகப்பல் அல்லாஹூ மின்னா வா மின்கும்

நீங்கள் எழுதும் கருத்து பெரும்பாலுலம் நன்றாக இருக்கிறது.

எனக்கு ஒரே ஒரு ஆட்சேபம்.

நீங்கள் கூறினீர்கள்,
"இஸ்லாத்தின் வலிமையான கூறாகிய ஜும்ஆ பேருரையை மக்களின்,
சமுதாயத்தின் முன்னேற்றம், கல்வி, நடைமுறை தொழில் நுட்ப வளர்ச்சி,
பிரச்சனைகளை பற்றி, ஆரோக்கியமான தீர்வுகளை பற்றி மற்ற பிரயோஜன
விஷயங்களை பற்றி, யதார்த்தமாக பேசாமல் எத்தனை காலம்தான் இன்னும்
துல்ஹஜ் பிறை பதிமூன்றைமுக்காலின் பெருமைகளையும், ஆட்டை அறுப்பது
எப்படி என்றும் பேசி நம்மை தாலாட்டப்போகிறார்களோ என்ற அயர்ச்சி
ஏற்பட்டது."

அல்லாஹ் அஜ்ஜ வஜ்ஜல் மனிதனின் வெற்றியை தொழில் நுட்ப வளர்ச்சி
போன்றவற்றில் வைத்து இல்லை. ஒருவனின் வெற்றி இஸ்லாத்தில் வைத்து
இருக்கிறான். ஆகையால் தீன் சம்பந்தமான விஷயங்கலளைப் பற்றி பேசுவது தான்
சிறந்தது.

ரஸீலுல்லாஹ்(ஸல்) தொழுகையில் முக்கியத்துவத்தை பல‌
முறை கூறியிருக்கிறார்கள். அதை எந்த சஹாபாவும்(ரதி) தாலாட்டாகக்
கருதியதாக இல்லை. இம்மாதிரி நற்செய்தியைப் பற்றிக் கூறும் ஹதிஸ்கள்
காதுக்கு இனிமையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் அஜ்ஜ வஜ்ஜல் கூறுகிறான்,

"And Remind for verily a reminder benefits the believer"(51:55)

நினைவூட்டுங்கள் ஏனென்றால் நினைவூட்டுவது மூமின்களுக்கு பயன் அளிக்கும்

பரங்கியில் இன்னும் பலர் ஈது மற்றும் ஜும்ஆ தொழுகிறார்கள். அப்போது கூட‌
மார்க்க விஷயத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்றால் வேறு எப்போது தான்
பேசுவது? நீங்கள் கூறும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் உள்ளது.
சப்பாடு இல்லை என்றால் சஹாபா(ரதி) இரண்டு ரக்காத் தொழுவார்கள்.

நீங்கள் கூறும் சமுதாய பிரச்சனையப் பற்றி பேச அணுக பல இயக்கங்கள் உள்ளன.
பள்ளிவாசல் குத்பாவில் அல்லாஹையும் ரஸீலையும்(ஸல்) பற்றி வைத்துக்
கொள்வோம்.

நான் ஏதாவது தவறாக கூறினால் என்னை தயவு செய்து மன்னிக்கவும்.

வஸ்ஸலாமு அலைக்கும்.
"இஸ்லாத்தின் வலிமையான கூறாகிய ஜும்ஆ பேருரையை மக்களின், சமுதாயத்தின் முன்னேற்றம், கல்வி, நடைமுறை தொழில் நுட்ப வளர்ச்சி, பிரச்சனைகளை பற்றி, ஆரோக்கியமான தீர்வுகளை பற்றி மற்ற பிரயோஜன விஷயங்களை பற்றி, யதார்த்தமாக பேசாமல் எத்தனை காலம்தான் இன்னும் துல்ஹஜ் பிறை பதிமூன்றைமுக்காலின் பெருமைகளையும், ஆட்டை அறுப்பது எப்படி என்றும் பேசி நம்மை தாலாட்டப்போகிறார்களோ என்ற அயர்ச்சி ஏற்பட்டது."

Firstly, it is riduculous to make such a statement for Allah subhaanahu wa taala says in Al Quran

mohammad சொன்னது…

Assalamu alaikum,

I would say that Imam Abdullah is a very good imam who has concerns for the ummah. I lived for a short while only in parangipettai and he was a positive influence on me, alhamdulillah. And, people of parangippettai do not want him?

There are also many who think that they are experts in the hadeeth field and want to label whatever they do not know as against the sunnah.

Allah knows best

hameed maricar சொன்னது…

அன்பு சகோதரருக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
குறையொன்றுமில்லை நீங்கள் கூறியதில். நான் பிழை புரிந்திருந்தால் அல்லாஹ் அதை எனக்கு புரிய வைக்க, மன்னிக்க போதுமானவன்.
//// அல்லாஹ் அஜ்ஜ வஜ்ஜல் மனிதனின் வெற்றியை தொழில் நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் வைத்து இல்லை. ஒருவனின் வெற்றி இஸ்லாத்தில் வைத்து
இருக்கிறான். ஆகையால் தீன் சம்பந்தமான விஷயங்கலளைப் பற்றி பேசுவது தான் சிறந்தது. ////

நிச்சயமாக அல்லாஹ் மனிதனின் வெற்றியை இஸ்லாத்தில்தான் வைத்து
இருக்கிறான். ஆனால் இஸ்லாம் என்றால் என்ன என்று நீங்களும் நானும் புரிந்து வைத்திருப்பதில்தான் நெகிழ காத்திருக்கிறது முடிச்சு.

சடங்குகளும், வேத உச்சரிப்புகளும் மட்டும் தான் இஸ்லாம் அல்ல.

எனது அத்தாட்சிகளை உங்களை சுற்றி உற்று நோக்கி பாருங்கள்

எனும் இறை கட்டளை தான் தொழில்நுட்பத்திற்கான இஸ்லாத்தின் அழைப்பு.
தீன், மார்க்ககல்வி என்றும் துனியா, உலககல்வி என்றும் பொது அறிவை, கல்வியை இரண்டாக பிரித்ததில் தொடங்குகிறது உங்களது பதிவின் ஆதங்கத்தின் மூலம். இந்த பிரிவினை தான் பிரச்சினைகளின் மூலம்.

/// ரஸீலுல்லாஹ்(ஸல்) தொழுகையில் முக்கியத்துவத்தை பல‌
முறை கூறியிருக்கிறார்கள். அதை எந்த சஹாபாவும்(ரதி) தாலாட்டாகக்
கருதியதாக இல்லை ///

நமது உயிரினும் மேலான ரசூல் (ஸல்) அவர்களின் உரை இன்றும் நம்மை வீறு கொண்டு எழசெய்கிறது, இதயம் உருக அழசெய்கிறது. ஆனால் அவர்கள் தொழுகையை பற்றி மட்டும் எப்போதும் கூறிக்கொண்டு இருக்கவில்லையே. உலக முஸ்லிம்கள் இன்று இருக்கும் அவல நிலையிலே ரசூல் (ஸல்) அவர்கள் இப்படி தான் மொன்னை (முனை மழுங்கிய என்று மட்டும் அர்த்தம் கொள்ளவும்) பயான்கள் செய்து கொண்டு இருப்பார்களா என்று சொல்லுங்கள்.

/ // பரங்கியில் இன்னும் பலர் ஈது மற்றும் ஜும்ஆ தொழுகிறார்கள். அப்போது கூட‌
மார்க்க விஷயத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்றால் வேறு எப்போது தான்
பேசுவது? ///
இதை பேசக்கூடாது, இதை தான் பேசவேண்டும் என்று நான் சொல்லவில்லை. யாரும் சொல்ல முடியாது. ஆனால் நாம் ஹக்கை சொல்லாமல் விட்டதாலேயே இன்னும் இருட்டிலே இருக்கும் சகோதர சமுதாயத்தவர்கள் போல இவர்களுக்கும் இஸ்லாம் என்றால் நடைமுறை வாழ்க்கைக்கு தொடர்பில்லாதது போல் செய்யப்படும் உபதேசங்கள்...?
//// நீங்கள் கூறும் சமுதாய பிரச்சனையப் பற்றி பேச அணுக பல இயக்கங்கள் உள்ளன. பள்ளிவாசல் குத்பாவில் அல்லாஹையும் ரஸீலையும்(ஸல்) பற்றி வைத்துக்கொள்வோம். ///
சமுதாய பிரச்சனையப் பற்றி பேச, அணுக இஸ்லாம் அனுமதி அளித்த களமான மஸ்ஜிதையும் இது போன்ற பேருரையையும் சரியாக பயன்படுத்தாமல் விட்டதின் விளைவு தான் இத்தனை இயக்கங்களும் அதன் தவறான முன்னெடுப்புக்களும்....
இனியாவது தவறினை சரி செய்ய முயற்சிப்போம். அன்பு சகோதரரே…

இன்னும் நான் தெளிவு பெற வேண்டி உள்ளது என்று நீங்கள் கருதினால் abuprincess@gmail.com என்ற எனது பெர்சனல் ஐ டி க்கு மெயில் செய்யவும்.

மூமின்கள் ஒருவருக்கொருவர் கண்ணாடி போன்றவர்கள் என்பதற்கு ஏற்ப சுட்டி காட்டியமைக்கும், தங்களின் அன்பிற்கும் மிக நன்றி.

mohammad சொன்னது…

"Allâh has promised those among you who believe, and do righteous good deeds, that He will certainly grant them succession to (the present rulers) in the earth, as He granted it to those before them, and that He will grant them the authority to practise their religion, that which He has chosen for them (i.e. Islâm). And He will surely give them in exchange a safe security after their fear (provided) they (believers) worship Me and do not associate anything (in worship) with Me. But whoever disbelieved after this, they are the Fâsiqûn (rebellious, disobedient to Allâh)". (An-Nur 24:55)

I believe the solution to social problems lies in following complete islam. That is where true success lies.

Part of rasulullah sallallahu alayhi wasallam's eid khutbah was to address the muslimah.

Allah knows best

mohammad சொன்னது…

Assalamu alaikum

Hazrat Abu Musa Ash’ari (radhiallahu anhu) was asked regarding the number of takbeers
that Rasulullah (sallallahu alaihi wasallam) used to say in both the Eid salaahs. He replied:
"He (sallallahu alaihi wasallam) used to say four takbeers (in every rakaat), in the same
way as he used to say the takbeers in the salaat al-Janaaza". Hazrat Hudhaifa (radhiallahu
anhu) also confirmed this practice of Rasulullah (sallallahu alaihi wasallam). [Abu Dawud]
Imaam Tirmidhi (RA) has also recorded several narrations of similar meaning from
Abdullah Ibn Mas'ud (RA) and other Sahaabah-e-Kiraam (radhiallahu anhum).
Note: There is some disagreement amongst the Scholars on the number oF additional
Takbeers and the opinion in the Madhab of Imam Abu Haneefa (RA) is quoted, however the Imam leading the Salah should be followed. There is no disagreement on the
occurrence and sequencing of this Takbeers and matter of disagreement is only on the
number.

The hadith is authentic as mentioned here

http://www.geocities.com/~abdulwahid/abuhanifah/salaahHanafi.html#1.6

The number of takbir is a minor fiqh issue and should not be made into a big issue. Both the shafi and hanafi have their evidence and Umar Ibn Abdul Aziz(rahmatullahi alaih) said differences of opinion is a mercy. We all believe in iman, islam and ihsan

Both method are correct Allahu alam

If the Ijtihad of Imam Abu Haneefah is correct, he gets 2 reward and if the ijtihad is wrong, he gets one reward as mentioned in hadeeth

The Prophet (saw) said: “If a judge passes judgment and makes Ijtihad and he is right then he will have two rewards. And if he makes a mistake he will have one.” [This hadith is agreed upon (muttafaq a’alayh) from the hadith of ‘Amr b. al-‘Aas and Abu Hurayrah, Bukhari: 7352, Muslim: 1716.]

Allah knows best

hameed maricar சொன்னது…

அன்பு சகோதரருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

/// I would say that Imam Abdullah is a very good imam who has concerns for the ummah. I lived for a short while only in parangipettai and he was a positive influence on me, alhamdulillah. ///

தயவு செய்து கவனியுங்கள். எங்கள் பதிவு பொதுவான ஜும் ஆ பயான்களில் தென்படும் விஷயங்களை பற்றிய கருத்தே தவிர அப்துல்லாஹ் ஹஜ்ரத் போன்ற கண்ணியமான மனிதர்களை பற்றிய தனி மனித விமரிசனம் அல்ல. எங்களை பொறுத்தவரை, அப்துல்லாஹ் ஹஜ்ரத் மற்றும் எந்த இமாம்கள், உலமாக்கள் பற்றியும், அவர்கள் சமுதாய நலத்தில் கொண்டுள்ள அக்கறை குறித்தும் மிக உயர்ந்த கருத்துக்களையும் நல்ல அபிபிராயங்கலயுமே கொண்டுள்ளோம்.

/// And, people of parangippettai do not want him? ////
இது கொஞ்சம் கடினமான வார்த்தை பிரயோகம். தயவு செய்து தவிருங்கள்.

அது போல பிகஃஹ் சம்பந்தப்பட்ட அபிப்ராய பேதங்களை சகோதரர்களுக்கிடையே கிளரும் விஷயங்களை எமது வலைப்பூ என்றுமே ஒரு பிரச்சனையாக முன்னெடுத்ததில்லை; முன்னெடுக்காது. இந்த பதிவில் கூறப்பட்டது, அங்கு பேசப்பட்ட ஒரு விஷயத்தை செய்தியாக தர வேண்டும் என்ற அடிப்படையில் மட்டும் தான்.

நன்றி வஸ்ஸலாம்.

mohammad சொன்னது…

Assalamu alaikum brother abu princess,

I am sorry if I had come across as harsh and for generalisation. I appologise. Please forgive me.

Please inform the people who claim that the method of prayer is against the sunnah that they also have hadeeths to support their actions and not just 'madhabs'.

Jazakallah Khair

மீரா ஜமால் சொன்னது…

சிறிய வேண்டுக்கோள்

கருத்து சொல்லும் வலைஞர்கள் இன்ப தமிழில் பதிவு செய்தால் மிக்க நன்று.

hameed maricar சொன்னது…

அன்பு சகோதரருக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
நம்மிடையே அல்லாஹ் அன்பையே பேசு மொழியாக விதித்திருக்கையில், மன்னிப்பெல்லாம் எதற்கு சகோதரரே? உங்களின் வார்த்தைகளை படிக்கையில் எனது எழுத்துக்களை படிப்பது போலவே உணர முடிந்தது.
தற்போது அரிதாகி விட்ட, ஆரோக்கியமான, அருமையான கருத்தாடல்களுக்கு நன்றி.
அல்லாஹ் உங்களுக்கு(ம் நம் அனைவருக்கும்) அருள் புரிவானாக
வஸ்ஸலாம்.
அன்புடன்
ஹமீது மரைக்காயர்

Gulam Mohamed சொன்னது…

Assalamu Alaikum,

I apologize I don't have Tamil fonts right now.

Please avoid these kinda topics on this blog. We have tons of Hadeeds on these issues very clearly. We are following our own ways knowingly (and unwillingly?). Let's not throw Quranic verses on each other and make people starting an argument for the sake of arguing and forgetting that we are using Allah's words against each Muslim brothers.

I clearly understood the hunger of AbuPrinces (Hameed Maricar) in Imams utilizing the time given to them during Jumma and Eid; and properly utilizing it to communicate some good message. Some stupid examples are like How to be good person(Son, Friend, Father, Wife(do ladies attend?), etc) and encourage practicing Islam among people, instead of keeping it only inside Masjids.

You could ask how much expensive it would be to gather this big crowd in a single place. It is all about giving them some message that they could carry with them to their home and friends and spreading it among Muslim brotherhood. And Islam is giving this opportunity and we are missing it without understanding.

A humble request, if I have written anything wrong or hurting please accept my apologies in advance.

Salaam
Abu Khalid

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234