யாரும்மற்ற தனிமையில் இறைஇல்லத்தில் இருகரமேந்தி இறைஞ்சுகின்ற,இறையாளரின் துஆ க்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக ஆமின். அழகிய புகைப்படம்,பதிவிட்ட ஹமீது மரைக்காயர்க்கு நன்றி
பரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.
கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.
இங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.
இரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
அருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.
2 கருத்துரைகள்!:
தனிமையில் இறைவனிடம் கையேந்தும் அந்த அடியார்க்கும்,நமக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும். ஹஜ் பெருநாள் தொழுகையில் இப்படியா குழப்புவது? ஐவேளை தொழுபவர்களும் ஒரு கனம் குழம்பித்தான் போயிருப்பார்கள்."பாயன்" பயனில்லாமல் போய்விட்டது.
யாரும்மற்ற தனிமையில் இறைஇல்லத்தில் இருகரமேந்தி இறைஞ்சுகின்ற,இறையாளரின் துஆ க்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
அழகிய புகைப்படம்,பதிவிட்ட ஹமீது மரைக்காயர்க்கு நன்றி
அஷ்ரப் அலி.ஹ
லைலா அஃப்லாஜ்.
கருத்துரையிடுக