
நிச்சயமின்மை எனும் போர்வை நம் மீதும், நாம் டீல் பண்ணும் அனைத்து விஷயங்கள் மீதும் எப்போதும் படிந்துள்ளதை ஜனாசா தொழுகைக்கு வருகையில் (லாவது) கவனிக்க முடிந்தது.
மரணம் எனும் மாபெரும் நிதர்சனம் முகத்தில் அறையும் போது, சகலமும் அர்த்தமற்று போய்விடுகின்றன. நமது ஈகோக்கள், அபிலாஷைகள், ஏமாற்றங்கள், சூழ்ச்சிகள், உறவுகள், நல்லவை, கெட்டவை அனைத்தும் நம்மை பார்த்து கேலியாக சிரிக்கின்றன.
ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்டத்தில் நாமே இல்லாமல் போய் விட்ட பிறகு நமக்கு மிஞ்சுவது என்ன என்ற கேள்வியின் கணம் எப்போதும் தாங்க முடியாததாக இருக்கிறது.
சில பத்து வருடங்களின் வினைகளை பல ஆயிரக்கணக்கான வருடங்கள் வெம்மையில் காத்திருக்கிறது படைப்பாளனிடம் பதிலாக சொல்லி ஆகவேண்டும் என்ற உண்மை உரைப்பதற்க்காவது இந்த ஜனாசா தொழுகை எனக்கு பயன்படட்டும்.
அனைவரும் சுவைத்தே ஆக வேண்டும் என்று இறைவன் குறிப்பிடும் அந்த மெகா உண்மையின் வீரியம் (புரிந்தும்) புரியாமல் நமது கனவுகளில் புதைந்துக்கொண்டு நாம்....
(வாழும்போது நல்லவிதமாகவே வாழ்ந்து இன்று இல்லாமல் போய் விட்ட அனைவருக்காகவும், நமக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.)
ஒரு நல்ல சிந்தனையை பதித்தமைக்கு மிக்க நன்றி ! உலக வாழ்க்கையில் முழ்கி மறுமை சிந்தனை நம்மிடம் குறைந்துள்ளது தான் இதற்க்கு காரணம்.யாரவது மரணம் அடைந்து விட்டால் ஒரிரு நாட்கள் நம்மிடம் அந்த பயம் இருக்கும் அதன்பின் பழையப்படி நம்முடைய வேலையை ஆரம்பித்து விடுவோம்.ஈகோ,போட்டி பொறாமை,சூழ்ச்சிகள்....... என்று ! அல்லாஹ் நம் அணைவர்களையும் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக ஆமீன்.
பதிலளிநீக்குJazakallah Khair
பதிலளிநீக்குமனம் கனக்க வைக்கும் பதிவு. அதனாலோ என்னவோ, மறுமொழிகள் குறைவாக...
பதிலளிநீக்குமரணத்தை கண்முன் வைத்து வாழ்ந்துவரின் நேர்வழி தவறிடாமல் இருக்கலாம்.
தொடர்பான ஒரு கவிதை இங்கே
மறுமைச்சிந்தனையைக் மனதில் கொண்டுவந்தது,மரணசிந்தனை கட்டுரை.
பதிலளிநீக்குvery touching
பதிலளிநீக்குnice