புதன், 24 டிசம்பர், 2008

அக்கம்பக்கம்: புதுச்சத்திரம் - பு.முட்லூர் சாலை உடைப்பு!

சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை சுற்றுப்புற புவியியலில் நிகழ்த்திவிட்ட பாதிப்புகள் இன்னமும் சரிசெய்யப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.

காட்டாக, புதுச்சத்திரத்தை அடுத்துள்ளதொரு கிராமத்தில் ஊருக்குள் புகுந்த மழைநீரிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் சாலையில் குறுக்கே பள்ளங்களை வெட்டிவிட்டனர் . தண்ணீர் வடிந்து பலநாள்களாகியும் வெட்டிவிடப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்படாததால் சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் நகரப்பேருந்துகள் வேளங்கிப்பட்டு வரையே வந்து திரும்பிச்செல்கின்றனவாம்.

இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வேளங்கிப்பட்டு, தச்சக்காடு, சேந்திரகிள்ளை, மணிக்கொல்லை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலூருக்குச் செல்லவேண்டுமானால் பு.முட்லூர் வந்து பேருந்து பிடிக்கவேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1 கருத்து:

  1. நிஷா ஊருக்கு வந்துட்டுப்போயி ரொம்பநாளு ஆகியூம் கூட, நம்ம அதிகாரிமாறுங்க இன்னும் நித்திரையில்லிருந்து விழிக்கவில்லை என்பதைதான் அந்த "பஸ் போகமுடியாத கிராமங்கள்" எடுத்துக்காட்டுகிறது.

    (அட சீக்கிறமா விழிங்கப்பூ,பஸ் வரும் நாழியாகுது)

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...