சனி, 20 டிசம்பர், 2008

வெள்ள நிவாரணத்தொகை: பரங்கிப்பேட்டை பரபரப்பு.

கடந்த வாரம் வெள்ள நிவாரணத் தொகையாக பரங்கிப்பேட்டையின் சில வார்டு (பேரூராட்சித்தொகுதி) களில் ரூ. 75இலட்சம் வரை வழங்கப்பட்டதாம்।
வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் சில வார்டுகளில் சில வீடுகள் விடுபடுவதாகக் கூறி பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற சாலைமறியலில் சில மன்றஉறுப்பினர்(கவுன்சிலர்)களும் கலந்துகொண்டனர்.

சாலைமறியல் தொடர்பாக கைது நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டது. இதில் கவுன்சிலர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை யடுத்து பரபரப்பு ஏற்பட்டது. சுமார்117பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

சிதம்பரம் வட்டாட்சியர் தன்வந்த கிருஷ்ணன், செல்வி இராமஜெயம் ச।ம।உ, ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்குவதாக காவல்நிலையத்தை சூழ்ந்துகொண்ட மக்களுக்கு உறுதி அளித்தனர்.

நமது நிருபர்

1 கருத்து:

  1. வெள்ள நிவாரண தொகை விவகாரத்தில் சில வார்டுகளில் வீட்டில் வசிப்பவர்களுக்கே தெரியாமல் "நிவாரணதொகை" வேறு யாரோ (??) வாங்கி சென்றுவிட்டதாகவும்,பேசப்படுகிறது.

    "பணம் என்றால் பிணமும் வாயைதிறக்கும்" என்ற முதுமொழி தான் என் ஞாபகத்துக்கு வந்தது.

    பதிலளிநீக்கு