சனி, 20 டிசம்பர், 2008

புதுப்பள்ளி பிரச்சனை

புதுப்பள்ளி நிர்வாக தேர்தல் நடக்காததால் நேற்று பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையில் பரங்கிபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை ஏழு எட்டு மணி அளவில் தொடங்கிய சமாதான பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை.

இந்த தரப்பில் ஜுபைர், மரைக்கார், லுக்மான், ஷாஜகான், பிலால், ரபி என ஆறு பேரும் அந்த தரப்பில் மாலிக், கஜ்ஜாலி, உக்காஷ், அய்யூப் ஆகிய நான்கு பேரும் ரிமாண்ட் செய்யப்பட்டு கடலூர் சிறைக்கு இரவு பதினோரு மணியளவில் கொண்டு செல்லப்பட்டனர்.

இறைவனின் இல்லத்தை முன்னிட்டு செய்யப்படும் விஷயங்கள் எந்த பெரும் தீங்கான விளைவுகளை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ப்ரார்த்தனையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்த வேளையில் இது போன்ற சங்கடம் தரும் கைது நிகழ்வு ஊரின் முஸ்லீம் பொது மக்களிடையே வருத்தத்தினை ஏற்படுத்திஉள்ளது. நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதனால் திங்கட்கிழைமை தான் அவர்கள் அனைவரும் பெயிலில் வர முடியும்.

7 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த பிரச்சனையில் நம் சகோதரர்கள் கைது செய்யப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது.

    நம் சமுதாய மக்களிடையே ஒற்றுமை ஓங்கவும் புதுப்பள்ளி பிரச்சனை சுமுகமாக முடியவும் அனைவரும் இறைவனிடம் வேண்டுவோமாக.

    அலி அப்பாஸ்,
    கொச்சின்.

    பதிலளிநீக்கு
  2. நமக்கிடையே சகோதரத்துவம் நிலைக்கொண்டிருந்தால், நிலமை இந்த(கைது) அளவுக்கு போய்யிருக்காது.
    ஆடுகள் அடித்துக்கொண்டால் ஒநாய்க்கு தான்கொண்டாட்டம்.என்பதையாவது புரிந்துக்கொள்ளுமா சமுதாயம்?

    பதிலளிநீக்கு
  3. ஓநாய் பார்த்தா என்ன உடும்பு பார்த்தா எனக்கு என்ன?...

    என் காரியம் முடிஞ்சிள்ள?

    இப்படி எண்ணும் மக்கள் பரங்கியில் அதிகரித்து வருகிறார்கள்...




    Sultan Abbas
    pno

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    அல்லாஹ்வின் வீட்டை நிர்வகிக்க தகுதி இல்லாதவர்களால் எப்போதும் பள்ளிவாசல் விசயத்தில் எழும் என்பதற்கான அடையாளமாக புதுபள்ளி
    சம்பவம் நடந்துள்ளது. பள்ளிவாசலை அபகரிக்க நினைக்கும் தற்போதைய தகுதி அற்ற நிர்வாகதிடமிருந்து பள்ளியை மீட்டு எடுக்க அனைவரும் ஒரு சேர்து பாடுபட வேண்டிய தருணம் இது, அல்லாஹ் நம்மவர்களின் பள்ளி மீட்டெடுப்பு முயற்சியை வெற்றி பெற செய்வானாக.
    முகம்மது பைசல் , துபாய்

    பதிலளிநீக்கு
  5. Assalamu alaikum,

    Inna lillahi wa inna ilaihi raajioon.

    laa hawla walaa quwatta illa billah.

    This is a disgraceful incident that has happened in parangipettai, tamilnadu.

    May Allah hasten the release of the brothers in jails. Ameen

    It has been established from the Messenger of Allah (SAWS) that he said:
    “Feed the hungry, visit the sick and free the prisoner.”

    We ourselves are sending our own brothers to prison. naoodhubillah

    பதிலளிநீக்கு
  6. இது பற்றி Portonovo Forum மில் கருத்தலோசனை செய்யலாம்

    பதிலளிநீக்கு
  7. அஸ்லாமு அழைக்கும்,

    இன்ஷா அல்லாஹ் கும்மத்துப்பள்ளி - யை ஷிர்க்கு மற்றும் பித் அத் லிருந்து மீட்டு எடுப்பேர்ம்.

    அப்துல் ரஹ்மான்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...