வெள்ளி, 2 ஜனவரி, 2009

ஏன்? எதற்கு? எப்படி?

ஊரில் எப்போதும் பரபரப்பான போக்குவரத்து நிறைந்த கச்சேரி தெரு - சஞ்சிவீராயர் கோயில் தெரு சந்திப்பில் வசதியாக நாற்காலி போட்டு அமர்வது என்பது சாத்தியம் என்றால், அது பெரும்பாலும் கம்யூனிஸ (CPI) தோழர்களாலேயே முடிகிறது. அந்த அளவிற்கு குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையேனும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று மக்கள் பிரச்சினைகளை பட்டியலிடுகிறது.

அந்த வகையில் இன்று (02-01-2009) கச்சேரி தெரு முனையில், வெள்ள நிவாரணம் வழங்குவதில் முறைகேடு, நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியப்போக்கு என்று நீண்ட பட்டியலுடன், அவற்றை எதிர்த்து உண்ணாவிரதம் போரட்டத்தை நடத்தியது.

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்வுண்ணாவிரதத்தில் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

என்னதான் இவர்கள் மக்கள் பிரச்சினைகள் என்று பட்டியலிட்டாலும், இவர்களின் போராட்டங்களைப் பார்த்து மிஸ்டர் பொதுஜனமோ ஏன்? எதற்கு? எப்படி? என்று தலை சொறிந்துதான் செல்கிறார்.

1 கருத்து:

  1. இவர்கள் யாருக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டு ரோட்டை மறித்து உண்ணாவிரதம் இருந்தார்களோ,அதே திருவாளர் பொதுஜனம் தான் போக்குவரத்து இன்னலுக்கும் ஆளானார்கள்.

    பதிலளிநீக்கு