பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் நேற்று 04.01.2009 ஞாயிறு அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மஹ்மதியா ஓரியன்டல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வழக்கம் போல் இல்லாமல் நிறைய எண்ணிக்கையிலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிரீன் பாஸ் ஹோல்டர்களான வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் வந்திருந்தனர்.
கடந்த மூன்றாண்டுகளாக (யூனுஸ் நானா தலைமையில் இது 9 ஆண்டுகள்) செயல்பட்டுவந்த ஜமாஅத்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைவதால் இந்த ஜமாஅத்திற்கு இது கடைசி செயற்குழுவாகும். இந்த வருடத்திற்க்கான கணக்கு ஜனாப் ஆடிட்டர் இலியாஸ் நானா அவர்களால் வாசித்துக்காண்பிக்கப்பட்டு உறுப்பினர்களால் சிற்சில கேள்விகளுடன் ஏற்கப்பட்டது.
அடுத்து இது இந்த ஜமாஅத்திற்கு கடைசி செயற்குழுவாக இருப்பதால் தலைவர் எழுந்து தனக்கு ஒத்துழைப்பளித்த அனைவருக்கும், நிர்வாககுழு, செயற்குழு, வெளிநாடு வாழ் அமைப்பினர் மற்றும் சகோதரர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். கணக்கு வழக்குகளில் எந்த சிறு தெளிவு தேவைப்பட்டாலும், எந்த நேரத்திலும் ஜமாஅத்தில் வந்து தெளிவுசெய்துக்கொள்ளும்படியும், கணக்கு வழக்கு மட்டுமல்லாமல், எந்த விடயமானாலும் நேரில் கேட்கலாம் எனவும் தயவு செய்து பின்னால் பேசுவதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
பிறகு, ஜமாஅத்தின் பைலாவில் விதிமுறை எண் 9 ல் (தேர்தல்) சில மாற்றங்கள் (ஜமாஅத் தலைவராக போட்டியிடுபவர் போஸ்டர், ஆட்டோ, நோட்டிஸ் விளம்பரம் மற்றும் தனிநபர் தாக்குதலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், தனிப்பட்ட முறையில் மக்களை சந்தித்து மட்டுமே ஆதரவு தேட வேண்டும், வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு வாக்கு வழங்க இணையத்தின் (வெப் கேமரா) மூலம் வசதி போன்றவை) முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
பிறகு, அடுத்த ஜமாஅத்தினை எங்ஙணம் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த விவாதம் துவங்கியது.
வெளிநாடு வாழ் சகோதரரான ஜனாப். ஜுல்பிகாதர் அலி தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் தனது நிர்வாகத்தை தானே தேர்வு செய்யும் தற்போதைய முறை மாறி நிர்வாகிகளும் பொதுமக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை முன்வைத்தார். இதற்கு பிறகு பல விதமான கருத்து பரிமாறல்கள் நடைபெற்றன. இதுவிடயமாகவும் தேர்தல் எப்படி, என்று, எப்போது என்பது குறித்து ஒரு கருத்து எட்டப்படாததால் மக்ரிபு தொழுகைக்கு பிறகும் கூட்டம் தொடர்ந்தது.பிறகு, தேர்தலை செயல்படுத்தும் அதிகாரிகள் 5 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
பிறகு இலக்கின்றி நீண்ட வாத விவாதங்களுக்கு பிறகு ஜமாஅத் தலைவர் தனது நிர்வாகிகளை தானே தேர்ந்தெடுப்பதா அல்லது பொதுமக்களா என்ற விடயத்திற்கு முடிவு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18 .01. 2009 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்குழுவில் தீர்மானத்திற்கு விடப்படும் என்கிற தீர்மானங்கள் ஏற்பிற்கு பிறகு இஷா தொழுகை க்கு வெகு நேரம் கழித்தே கூட்டம் நிறைவுற்றது.
நாம் செய்ய வேண்டியது ஒன்று பாக்கியுள்ளது. அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நமது கட்டமைப்பு எனும் மிகப்பெரும் அருட்கொடை இறைவனும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியின்படி மேம்பட்டு சிறக்கவும் அதில் ஷைத்தான் தனது வேலையை காட்டிவிடாமல் இருக்கவும் மனம் உருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுதான் அது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
//அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நமது கட்டமைப்பு எனும் மிகப்பெரும் அருட்கொடை இறைவனும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியின்படி மேம்பட்டு சிறக்கவும் அதில் ஷைத்தான் தனது வேலையை காட்டிவிடாமல் இருக்கவும் மனம் உருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுதான் அது.//
பதிலளிநீக்குநமக்குள் விருப்பு வெறுப்பின்றி புதிய தலைவரை (தற்போதைய தலைவரே பொறுப்புக்கு வந்தாலும் சரியே) தேர்ந்தெடுக்க அல்லாஹ் நமக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்துவானாக ஆமின்.
i think still you have not left the 2008 year. the date 04.12.2008 is given instead of 04.01.2009. please try to read your own message before putting it in web.
பதிலளிநீக்குHamdhi Abbas - Dubai
Sorry That was my mistake
பதிலளிநீக்குThank You for mentioning
Insha Allah I will.
Salams
abuprincess