திங்கள், 5 ஜனவரி, 2009

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கம் (KPIA)

வெளிநாடுகளில் வாழும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இறைவன் அவர்களுக்கு அருளிய அழகிய இயல்புகளை துணையாய் கொண்டு தாம் வாழும் ஊர்களில் எல்லாம் ஊர்மக்கள் நலனுக்காக அமைப்புக்கள் துவக்கி அழகிய முறையில் நடத்தி வருவதை நாம் அறிவோம். அவ்வாறான அமைப்புக்களில் தற்போது ஊர் வந்திருக்கும் குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கத்தின் (KPIA) தலைவர் ஜனாப் அ.பா.கலீல் அஹமது பாகவி செயலாளர் ஹாஜி. எஸ். குலாம் ஜெய்லான் மியான் பொருளாளர் இஸட். ஹபீபுல்லாஹ் மரைக்காயர் அவர்களை மைபிஎன்ஓ சார்பாக சந்தித்தோம்..

கேள்வி : தங்களின் அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி.... ?
ஊர் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். குவைத் பரங்கிப்பேட்டை ஜமாஅத் என்ற பெயரில் முன்பு செயல்பட்டு வந்த அமைப்புதான் 3 வருடங்களுக்கு முன்பு குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கமாக மாற்றம் பெற்று செவ்வனே செயல்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் கிருபையால் இது 4 வது வருடம்.

கேள்வி : உறுப்பினர்கள் எத்தனை பேர்? அவர்களின் ஒத்துழைப்பு பற்றி .... ?
குவைத்தில் நமது பரங்கிப்பேட்டைக்காரர்கள் சுமார் 200 - 250 பேர் இருக்கலாம். எங்கள் அமைப்பில் சுமார் 60 பேர் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். மாதா மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கூடுகிறோம். மாத சந்தா 1 அல்லது அரை தினார். இங்கே பெரிய அமைப்பான குவைத் அய்யம்பேட்டை அமைப்பை (1500 அங்கத்தினர்கள்) போலவோ, மற்ற ஊர்களில் உள்ள நமதூர் அமைப்புக்கள் போலவோ அல்லாமல், துவக்கநிலை அமைப்பான எங்களுக்கு அத்தனை பொருளாதார பலம் இல்லையன்றாலும், எங்கள் சேவைகளை திட்டமிட்டும் தீர்க்கமானதாகவும் அமைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறோம்.

கேள்வி : என்னென்ன களங்களில் தங்களின் பணி உள்ளது.. ?
இதுவரை சுமார் 13 திருமணங்களுக்கு உதவி, 3 வருடங்களாக அனைத்து பள்ளிகளுக்கும் நோன்பு கஞ்சி முறை, சில பள்ளிவாசல் மின்கட்டணம், 3 வருடங்களாக பித்ரா - இவை அனைத்தும் ஊரின் பொதுத்தலைமையான இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்து செய்யப்பட்டு வந்துள்ளது. இவை அல்லாமல், உள்ளூர் (குவைத்) தபால் சேவை, வேலைவாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை பகிர்வது, மற்றும் கல்வியில் சிறார்களுக்கு ஆர்வமூட்டுதல் போன்றவற்றை செய்து வருகிறோம்.

கேள்வி : வருங்கால திட்டங்கள்.....?
உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு கல்வி போன்ற நிலையான நற்காரியங்களுக்காக ஒரு நிலப்பிரிவை, அமைப்பின் பேரில் வாங்கும் திட்டம் ஒன்று உள்ளது. இறைவன் நாடினால்... நல்லவை நடக்கும்.

இன்ஷா அல்லாஹ் நல்லவை நடக்கும் என்ற வாழ்த்துக்களுடன் நாம் விடைபெற்ற போது சகோதரர்கள் முக்கியமாக சொன்ன வி­டயம் உறுப்பினர்களின் பங்களிப்பை பற்றியது.
அவரவர் வேலைபளுவினால் கூட்டங்களுக்கு வராமல் இருக்கும் சகோதரர்கள் அவர்களின் பங்கினை இன்னும் சிறப்பாக செய்தால் அமைப்பு இன்னும் வலுப்பெற்று இன்னும் பல சாதனைகளை படைக்கலாம் என்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் இனி நிகழும் அந்த மாற்றம் என்று துஆ செய்தவர்களாக விடைபெற்றோம்.
இறைவனுக்காக இவர்கள் செய்யும் இந்த செயல்களுக்கான கூலியை அல்லாஹ் ஈருலகிலும் தந்தருள்வானாக.

3 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

    வெளிநாடு வாழ் சகோதரர்கள் செய்யும் இந்த சீரிய பணி பாராட்டத்தக்கது.

    இதுபோல நம் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் வாழும் மற்ற வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி நம்மூர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    குவைத் அல்லாது மற்ற நாடுகளில் இது போன்று உள்ள அமைப்புகள் பற்றி மேலும் தகவல்கள் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    குவைத் நாட்டில் இத்தகைய சீரிய பணியை செய்து வரும் இந்த சகோதரர்களுக்கு என்னுடைய துஆக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.
    அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. அல்லாஹ் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வானாக. ஆமீன்.

    அலி அப்பாஸ்,
    கொச்சின்.

    பதிலளிநீக்கு
  2. உழைக்கப்போன இடத்திலேயும் ஊர்நலனில் அக்கரைக்கொண்டு அமைப்புக்கள் வழியாக சமுகசேவைச்செய்துவரும் குவைத்-பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம்(KPIA) பணி மென் மேலும் சிறக்கவாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஓய்வு இன்றி ஊர் நலனுக்காகக ஓயாது உழைக்கும் அஹ. ப. கலீல் அகமது பணிகள் குவைத்திலிருந்து ஒளிவீச துபாய் இலிரிந்து வாழ்த்தும் நெஞ்சம்

    அப்துல் காதர் ச/ஒ ஸாலிஹ் மரிக்கார்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...