6751643600 - 2009 ஜனவரி 1 அன்று உலக மக்கள் தொகை (குத்து மதிப்பாய் தாங்க)
50 கோடி ரூபாய் - இந்த வருடம் விளம்பரத்தில் மட்டும் டோனி சம்பாத்தித்த தொகை. (வாழ்க புத்திசாலி ரசிகர்கள்)
10000 ரூபாய் - ஒரு ரேஷன் கார்டை காட்டினால் போதும் இவ்வளவு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. உங்க ஊரில் அல்ல திருமங்கலமான ஊரிலாம் .... ( எல்லாம் இடை தேர்தல் மாயஜாலம்).
80000000 - ஒரே நாளில் இத்தனை முறை இன்டர்நெட் விளையாட்டில் செருப்படி பட்ட ஒரே தானை தலைவர் - வேறு யார் ... அவர் தான்.
8000 கோடி ரூபாய் - சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராமலிங்க ராஜூ செய்துள்ள மோசடியின் அளவாக கூறப்படுவது..
ஜனவரி 8 முதல் 18 வரை - சென்னையில் 32 ஆவது மாபெரும் புத்தக கண்காட்சி. இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பில், 588 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 512 நிறுவனங்கள் தங்கள் நூல்களை விற்பனைக்காக வைக்கின்றன.
ஜனவரி 8, 2008 - இன்று சுமார் 53171 நோக்கர்கள் வரை பார்வையிட்டுள்ள இந்த வலைப்பூ துவக்கப்பட்ட நாள். இன்றுடன் சரியாக ஒரு வருடம். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் "நாணயம்"தவறியதால் எட்டாயிரம் கோடியை ஏப்பம் விட்டது பங்கு வர்த்தகத்தில் ஈடுப்பட்டு குறுகியக்காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டவர்களின் கனவு- களவுப்போனதுதான் மிச்சம்
பதிலளிநீக்குபிறந்து ஒருவருடமாகும் வலைபூவிற்கு
பதிலளிநீக்குபல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!!!