புதன், 14 ஜனவரி, 2009

பொங்கல் ஓ பொங்கல்

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு பின்னாலே தோன்றிய மற்ற குடிகளை போல வாழ்ந்து வரும் தமிழ் பெருமக்களாகிய நாம் சிறப்புற கொண்டாடும் காவிய விழா பொங்கல்.
எமது சிறு வயதுகளில் பொங்கல் என்பது இப்போது போல் ஒரு சிறு விழா அல்ல. பெரும் கேளிக்கைக்கும், பிராவகமெடுத்து பொங்கும் சந்தோஷமுமாக ஒரு திருவிழாவாக பொங்கல் இருந்ததை (நான் கூட) கண்டுள்ளேன். அப்போதே எனது பாட்டன் தனது கால பொங்கல் வைபவ நிகழ்வுகளை வர்ணிக்கும் போது ஏக்கமாக இருக்கும்.


சிறுபிராயம் என்பதனால் நம்மை மிகவும் கவரும் மாட்டுப்பொங்களில் மாடுகள் கூட எங்களுடன் கூடி களிப்பதாக (கொடுமை படுத்துகிறோம் அதை) பதிந்த நம்பிக்கை இன்னும் தேயவில்லை.

எங்களின் சிறு விளையாட்டு பானைகளில் பொங்கி வரும் சிறு அழுக்கு கூழை ஆளுக்கு இரண்டு மில்லிலிட்டர் பகிர்ந்து குடிப்பதில் பொங்கல் தனது மதிப்பை பெருந்தன்மையாக பெற்றுக்கொள்ளும்.

மற்றைய பண்டிகைகளை போல் இல்லாமல் இதற்க்கு வரும் ஐந்து நாட்கள் லாங் லீவ் கூட பொங்கலை நாம் நேசிப்பதற்கு காரணமாக இருந்திருக்குமோ என்னவோ..

ஆனால் தற்போதைய பொங்கல் கொண்டாட்டம் அச்சமூட்டுவதாக உள்ளது... தற்போதைய சிறார்கள் ஓடி ஆடி பாடி திரிவதை விட்டு இரண்டுக்கு இரண்டு சைஸ் பெட்டிக்குள் தங்கள் இயலுமையை (potential) தொலைத்த்விட்டு சப்பானிகளாய் முடங்கி போய் ஸ்ரேயாவையும், படிக்காதவனையும், அபத்த காமடிகளையும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டு தங்களது பொழுதுகளை கழிப்பதை பார்க்கும் பொது அச்சமாகத்தான் உள்ளது. அதை விட ஆபத்து முன்னுதாரணமாக திகழ வேண்டிய பெற்றோர்கள் தங்கள் வேலைய்களை விட்டு விட்டு தாங்களே இந்த கூத்துக்களை பார்த்து கும்மியடிப்பது தான்.

கிராமங்கள் கூட இதற்க்கு விதிவிலக்கு இல்லாத களமாக மாறிவிட்டது இன்னும் கொடுமை.

ஐயாயிரம் ஆண்டுகள் முன்பு, எந்த மதமும் சாராமல் தஸ்யுக்களாக சிந்து சமவெளியில் வாழ்ந்த எமது பெரு முன்னோர்களின் பிற்கால அடையாள மிச்சமாக எஞ்சியிருப்பதாக தோன்றும் இந்த அழகிய நிகழ்வு இன்று அதன் சாரம் இழந்து மற்றொரு விடுமுறை நாளாக மாறிவிட்ட கொடுமை கண்டு மனம் கனக்கிறது.

இந்த நாளில் கேமரா எடுத்து கொண்டு அலைந்ததில் ஊரின் இரண்டு மூன்று தெருமுக்குகளில் கரும்பு விற்பனை சூடு பிடித்து ஓடி கொண்டிருந்தது. அகரம் அருகில் சில பெண்கள் புது பானை சுமந்து நாளை பொழைப்பை பற்றி பேசி கடந்து சென்றனர். வழக்கம் போல் டாஸ்மாக்இல் விற்பனை படுஜோர். நான் நடிகையா வராமல் இருந்தால் கண்டிப்பாக டாக்டர் ஆகா வந்திருப்பேன் என்று ஒரு வீட்டில் இருந்து ஒலித்த so called நடிகையின் குரலில் மறைந்து அமிழ்ந்து போய் கொண்டிருந்தது பொங்கல் கொண்டாட்டம்.
நல்லவேளை அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் டி.வி. இல்லை.
பொங்கலோ பொங்கல்.

11 கருத்துகள்:

  1. Masha Allah..
    Very nice scenes and memorable comments.
    But seeing TV,can be rediculous but it avoid certain amount of people indulging in quarells and public nuisence.

    பதிலளிநீக்கு
  2. பொங்கலோ...பொங்கல் அது ஒரு
    சமயம் சார்ந்த கொண்டாட்டம் நம் சமயத்திற்க்கு ஒத்துவராத கொண்டாட்டம் என்றாலும் கூட , சின்ன வயசுலே நானும் சில நண்பர்களும் சேர்ந்து மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பொங்கலோ...பொங்கல் மாட்டுப்பொங்கல் என கத்திக்கொண்டு சென்றதை இப்ப நினைச்சாலும் மனசு மகிழ்ச்சியில் பொங்கதான் செய்யுது.

    பதிலளிநீக்கு
  3. டாஸ்மார்க்கில் உற்சாக பாணம் வாங்கி அதை அருந்துவதற்க்கு பேருந்துநிலையத்தில் பெண்கள் நிற்க்கும் பகுதி "திறந்த வெளி பாராக" மா(ற்)றிய கொடுமையை ஒரு தனி பதிவிடுங்களேன்

    பதிலளிநீக்கு
  4. ///நான் நடிகையா வராமல் இருந்தால் கண்டிப்பாக டாக்டர் ஆகா வந்திருப்பேன் என்று ஒரு வீட்டில் இருந்து ஒலித்த so called நடிகையின் குரலில் மறைந்து அமிழ்ந்து போய் கொண்டிருந்தது பொங்கல் கொண்டாட்டம்.///

    நிருபர்: நடிக்க வரலேன்னா என்னவா ஆகியிருப்பீங்க?

    நடிகை: 'டாக்டரு' ஆகியிருப்பேன்..

    நிருபர்: "இப்பத்தான் உங்களுக்கு நடிக்க வரலேல்ல, டாக்டரு ஆவலாம்லோ"

    நடிகை:...????
    வுடு ஜூட் :_)))))))))))))))))

    பதிலளிநீக்கு
  5. //இயலுமையை (potential)//

    அபூபிரின்சஸ்.., நல்ல முயற்சி

    Potential என்பதற்கு இயல்திறன் என்று கூறலாமே.

    பதிலளிநீக்கு
  6. இளமைப் பருவ நிகழ்வுகளை அசைப்போடும் போது மனது இலேசாகி மிதப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றும். சகோதரர் ஹமீதின் பல பதிவுகள் நம்மை இளமைக் காலத்திற்கு இழுத்து சென்று மனதை மிதக்க வைக்கின்றது.

    சலங்குகார தெருவில் பெரும் விழாவாக அரங்கேறும் பொங்கள் நாட்களின் நினைவுகளை திரும்ப கொடுத்த இந்த பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. Assalamu alaikum,

    We only have 2 eids. We distance ourselves from festivals that are pagan in nature and worship of cows.

    பதிலளிநீக்கு
  8. Assalamu allaikum,

    Please afraid and distance yourself from INNOVATION in the relegion.

    Please be confident and responible before you publish anything in the public arena.

    for me its a ignonrant time festival(Jaahiliya)

    பதிலளிநீக்கு
  9. Dear Yousuf
    Assalamu allaikum,
    Insha Allah I will.
    But Please explain how the news (not the festival) is anti islamic.
    May Allah forgive and save all of us from going against Him.
    Salams
    Hameed Maricar.L (abuprincess)

    பதிலளிநீக்கு
  10. Dear Hameed Maricar,

    As i thought this news site is run with Muslim identity, I want to put my comment to you to avoid "something between Halal or Haram" in the public, as you know lot of fatwas regarding this issue.

    Allah knows the best.
    Zazakallah

    பதிலளிநீக்கு
  11. Wa alaikumus salam

    You have depicted the festival using the terminology, "naam" which means 'we'.

    So, it is not correct to tell everyone in the world that "naam" or "we" committed this sin.

    Furthermore, this article gives the impression that muslims are celebrating the 'festival' and the article is not written in a manner to condemn the practice of muslim.

    So, it does not project the concept of islam.

    Wassalam
    Your brother

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...