சற்று உற்றுப்பார்த்தால் அருவருப்பான, தேசதுரோக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆணவம் மற்றும் மக்களின் மீதான அலட்சியப்போக்கு மெகா சைஸில் தெரியும். தெரிகிறதா?
இன்றும் வழக்கம் போல அத்தனை வாகனங்களும் அதே வேகம் குறையாமல் இந்த நொண்டி பாலத்தை கடந்து சென்று கொண்டு தான் உள்ளன. இதற்க்கு முன் இரண்டு தடவைகள் இந்த பாலம் குறித்து இதே வலைப்பூவில் பதிவிட்டும் எந்த பாயிதாவும் இல்லை. ( http://mypno.blogspot.com/2008/03/blog-post_27.html & http://mypno.blogspot.com/2008/11/blog-post_8168.html )
கும்பகோணம் பள்ளி தீவிபத்து, சரிகாஷா ஈவ்டீசிங் மரணம் போல இங்கும் எதாவது பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் இவர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பார்கள் போல.
பாலம் இரண்டு
" வர்ர்ர்ர் ரூரூம்ம்ம்ம் ஆனா வராஆஅஆஆ...து" என்று ஏதோ வடிவேலு காமடி ரேஞ்சில் போய்கொண்டு இருக்கும் இந்த பாலம் தான் பரங்கிபேட்டை மற்றும் அதன் சுத்துப்பட்டு அத்தனை கிராமங்களுக்கும் கனவுப்பாலம்.
முஹம்மது யூனுஸ், பஜுலுர்ரஹ்மான் போன்றவர்கள், கொடி பிடிக்கும் கட்சிகள் முதல் தெருமுக்கு ஷாஜகான் வரை அத்தனை பெரும் கனவு கண்டு முட்டி மோதி முயற்சி செய்து ஒரு வழியாக ஒன்பது கோடி செலவில் பல வருடங்களுக்கு முன்பு sanction ஆகிய பாலம், இன்று கிட்டத்தட்ட பதினாலு கோடி ப்ராஜக்டாக வளர்ந்து நிற்கிறது.
நாம் சென்று பார்த்த போது ஆற்றின் கால்வாசி தூரம் மணல் அடித்து வேலை மிக ஜரூராக நடந்து கொண்டு இருந்தது. அதன் முடிவான இடத்தில் நின்று அக்கரையை ஏக்கத்துடன் பார்த்தபோது தொட்டு விடும் தூரம் தான் என்ற நம்பிக்கை துளிர்த்தது
இந்த பாலம் வந்து விட்டால் "கொல்லைக்கி போய் ரெண்டு கொத்து கருவாப்பெளை பறிச்சிட்டு வா என்பது போல் கிள்ளைக்கு போய் ரெண்டு மூட்ட அரிசிய வண்டியில போட்டுட்டு பத்து நிமிஷத்துல வா ராசா" என்று நம் வீட்டு பெண்கள் நம் சிறார்களை இயல்பாய் ஏவக்கூடிய வசதியான நிலை வரலாம்.
சில பல வருடங்களுக்கு முன்பு சமாளிக்க முடியாது என்று அடாசு ரேட்டுக்கு முன்னோர்களின் அக்கறையான அக்கறை நிலங்களை விற்றவர்கள், இப்போது யோசிக்க கூடும். இப்போது நிலம் இருந்தால் மட்டும் என்ன அவையும் மனைபிரிவுகளாக மாறி விடும்.
சிதம்பர பயணத்திற்கு கிட்டத்தட்ட பன்னிரண்டு கிலோ மீட்டர், பெட்ரோல் மற்றும் நேர மிச்சம் தரும் இந்த பாலம் இத்தனை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
நச்ச்ச்ச் பதிவு.
பதிலளிநீக்குமக்கள் நலனில் அக்கறை இருக்குமானால் இனியாவாது விரைந்து சீர் செய்ய அரசு அதிகாரிகளும் ,அரசியல்வாதிகளும் முன் வரட்டும்.இல்லையெனில் ஓட்டுப் பொறுக்கி
வளர்ந்த அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறியும் காலம் நெருங்கி விட்டது என்பதை நினைவில் வைக்கட்டும்.
அக்கரை-க்கான பாலம் குறித்த தங்களின் கட்டுரையில்
பதிலளிநீக்குஅக்கறை வெளிப்பட்டதை உற்சாகத்துடன் படிக்க முடிந்த
அதே தருணத்தில் அகரம் பாலத்திற்காக நத்தை வேகத்தில் கூட செயல்பட மறுக்கும் அதிகாரிகள் குறித்து
என்ன சொல்வது?
பொதுப்பணித் துறையின் உதவி பொறியாளார், பாலம் நன்றாக இருக்கின்றது, பக்கவாட்டு சுவர் மட்டுமே இடிந்துள்ளது என்று அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளதாக ஒரு தகவல் உலா வருகின்றதே. இது உண்மையா?, கொஞ்சம் விசாரித்து follow-up கட்டுரை எழுதுங்கள்
அன்புடன்
ஹம்துன் அப்பாஸ்
அல் ஹஸா
"கிள்ளைக்கு போய் ரெண்டு மூட்ட அரிசிய வண்டியில போட்டுட்டு பத்து நிமிஷத்துல வா ராசா" என்று சொல்ல அங்கு உள்ள நிலங்கள் விளை நிலங்களாக இல்லாமல் விலை நிலங்களாக உருமாருவதால்,
பதிலளிநீக்குகிள்ளைக்கு போய், வீட்டு மனைப்பிரிவு சந்தா கட்டிவிட்டு வா என்று சொல்லும் நிலை தான் உருவாகும்.
Assalaamu Alaikum brother...
பதிலளிநீக்குBeautiful Pictures....
Thank you...
May Allah help u and me...
Guide u and me..
Wassalaam
Abbas al Parangi al Singapoori
Vaathiyaapalli
pno
//இங்கும் எதாவது பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் இவர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பார்கள் போல. //
பதிலளிநீக்குஅதிகாரிகள் எப்போதுமே எதாவது அசம்பாவிதம் நடந்தா அப்ப சமாளிச்சுக்கலாம் என தூக்கத்தில் இருப்பார்கள், அவங்களை விடுங்க
நாம (மக்கள்) எல்லோருமா சேர்ந்து தேர்ந்தெடுத்த நம்ம பிரதிநிதி எங்கே போனாங்க ?? பாலத்துவழியாதானே அவங்களும் போறாங்க அவங்க மனசு
உறுத்தவேயில்லையா???
இரண்டு பாலங்கள் பற்றிய இந்த செய்தி ஒரு நல்ல பதிவு.
பதிலளிநீக்குபழைய பாலத்தை பற்றிய செய்தியை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தாலும் புதிய பாலம் வருகிற செய்தி சந்தோஷம் தரக்கூடியதுதான். இரு பாலங்களும் விரைவில் தயாராக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பழைய பாலத்தை விரைவில் சீர்செய்ய உள்ளூர் அரசியல்வாதிகளும் மற்ற அமைப்புகளும் சேர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது எதிர்ப்பார்ப்பாகும்.
இது பற்றி தினத்தந்தியில் இன்று வெளியான செய்தியை பார்க்கவும்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=462439&disdate=1/12/2009&advt=2
அருமையான செய்தி!
பதிலளிநீக்குவிரைவில் புதுப்பால திறப்பு விழாவிற்கான செய்தியை எதிர்பார்க்கின்றோம்.
அப்படியே இந்த செய்தியையும் கொஞ்சம் பார்த்துடுங்க....
http://ppettai.blogspot.com/2007/07/9.html
அன்புடன்.... கலீல் பாகவீ
Pokuvarathuku edaijalaka erukum palathai sari sayamal erukum karanam than enna?
பதிலளிநீக்குNamidam vote vangi vetrippetra " M.L.A." engai poonar?
பல வருசத்துக்கு முன்னாடி நிதி ஒதுக்கி இன்னும் இழுத்துக்கிட்டு கீது இந்த வெள்ளாத்து பாலம். பேட்டி கொடுக்கும்போது மட்டும் தோ இப்ப முடிஞ்சிடும் அப்ப முடிஞ்சிடும் சொல்றாங்களே தவிர,உடனடியா முடிக்காட்டி பதவியை ராஜினாமா செய்வேனு சொல்ற தைரியம் உள்ள அரசியல்வாதி யாராவது இருக்காங்களா????
பதிலளிநீக்கு