பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வியாழன், 15 ஜனவரி, 2009

நமது மாணவர்களின் கல்வி தரத்தை பற்றிய கவலை நாளுக்கு நாள் ஆழமாகி கொண்டே செல்கிறது. அட்வைஸ் என்ற பெயரில் அல்லாமல் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி மூலம் அவர்களின் நிலை உணர்த்தி அவர்களை ஊக்கபடுத்திடவும், கவனிக்க வேண்டிய முக்கிய குழுவாக உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதில் சேர்த்து கொள்ளவும் கல்விக்குழு முடிவு செய்தது.

விஜய் டிவியில் நடைபெறும் ஆரோக்கியமான நிகழ்ச்சியான நீயா நானா போன்று ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை மேடையில் அமர்த்தி அவர்களுக்கிடையேயான கலந்துரையாடலை நிகழ்ச்சியாக வழங்க தீர்மானித்துள்ளது.


இன்ஷா அல்லாஹ், வருகிற 17.01.9 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஷாதி மஹாலில் நிகழ்ச்சி நடைபெறும்.


இஸ்லாமிய ஐக்கிய் ஜமாஅத் மற்றும் பேருராட்சி மன்ற தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் தலைமை தாங்க, ஐந்து பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் முன்னிலை வகிக்க அண்ணாமலை பல்கலைகழக கடல் வாழ உயிரின ஆராச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர் கே.கதிரேசன் அவர்களும் கலிமா பள்ளியின் தாளாளர் ஜனாப். ஐ. இஸ்மாயில் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இருப்பதாக நிகழ்ச்சி அமையும். குவைத் பரங்கிபேட்டை இஸ்லாமிய பேரவை தலைவர் ஜனாப். அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தர உள்ளார்.


காலை 9 மணிக்கு முன் வரும் முதல் நூறு மாணவர்களுக்கு நுழைவு பரிசு உண்டு.

பல்வேறு சிந்தனையுடைய ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்தை பதிக்க இப்போதே ஆர்வமாக பெயர் கொடுத்து உள்ளனர்.


உங்களில் யாரேனும் மற்றும் வெளிநாடு வாழ சகோதரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்கள் பிள்ளைகள் இந்த ஆரோக்கியமான வித்தியாசமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினால் உடனே கல்விகுழுவை தொடர்பு கொள்ளுங்கள். (9894321527, 9894838845, 9994106594) அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறது கல்விக்குழு.

நல்லவை எதுவும் நடப்பதில்லை என்று நாம் குறைபட்டுகொள்வது வழக்கம். நல்லது ஒன்று நடக்கும் போது அதில் பங்களிக்காமல் இருப்பதின் மூலம் அப்படி குறைசொல்வதற்கான தார்மீக தகுதியை இழந்தவர்களாக நாம் ஆகவேண்டாமே...

4 கருத்துரைகள்!:

Vajhi Bhai சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்! கல்விக்குழுவின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியவை.

இந்த நிகழ்ச்சி பெற்றோர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும்.

நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்

Unknown சொன்னது…

இப்படி பட்ட நிகழ்ச்சிகள் நிச்சயம் நமது சமுதாயத்திற்கு மிகவும் தேவை. இதில் எனது குடும்பத்தாரையும் கலந்து கொள்ள சொல்லி இருக்கிறேன். நண்பர்களிடமும் சொல்லி உள்ளேன். அல்லாஹ் நம் அனைவரையும் நன்மையில் மட்டும் ஒன்று சேர்த்து வைப்பானாக. ஏற்பாடு செய்து உள்ள கல்விகுழுவிற்கு அல்லாஹ் அருள் புரியட்டும்

இப்னு இல்யாஸ் சொன்னது…

நல்லதொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கல்விக் குழு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.நிகழ்ச்சி சிறப்புற நடந்தேறிட பிராத்தனைகள்

மீரா(முத்து) சொன்னது…

இன்றைய கால கட்டத்திற்க்கு மிக மிக தேவையான நல்லதொரு நிகழ்ச்சி "நீயா நானா" என நாம் எதற் எதற்க்கோ போட்டிப்போடுகிறோம் கல்விக்காக "நீயா நானா" என போட்டியிருந்தால் அது ஆரோக்கியமாகவே இருக்கும்.

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234