எதிர் வரும் ஜமாஅத் தேர்தலில் வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டை மக்கள் ஆன்லைன் வழியாக ஓட்டு போடும் தீர்மானம் நிறைவேற்றப்ட்டிருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது NRIகளுக்கு ஓட்டு இல்லை என்கிற செய்தி கசிந்துள்ளதால் இவர்களிடைளே சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சில நாட்கள் முன்பு வரை அப்படித்தான் (ஆன்லைன் ஓட்டு) இருந்தது. ஆனால் சற்று உள்ளார்ந்து பார்த்ததில் இது இந்திய அரசியல் சட்டத்தில் பொருந்தவில்லை(?) எனவே, NRI களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்க இயலவில்லை" என்று கூறினர்.
இந்த ஆன்லைன் ஓட்டு மூலம் முழுமையாக ஓட்டுகள் கிடைத்திராவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் நிச்சயமாக இந்த வாக்கெடுப்பில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் குழுவின் இம்முடிவு ஏமாற்றமே அளிக்கிறது.
ஜமாத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என சொல்லப்படுவது வேதனையான செய்தி
பதிலளிநீக்குஊர் முழுக்க தாவத் போட்டு பரங்கிமாநகர நம் சமுதாய மக்கள் சந்தோஷத்தில் திளைக்கும் நேரத்தில் இந்த செய்தி வெளிநாட்டு வாழ் நமதூர் சகோதரர்களுக்கு மிகவும் வேதனையான செய்தி.
12 மஸ்ஜிதுகள்,பல்வேறு கொள்கைகள் இருப்பினும் ஈமான் எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்து ஒரு ஜமாத்தின் கீழ் ஒன்றினையும் பரங்கிப்பேட்டை மக்களுக்கு சிதம்பரம் தாலூக்க ஐக்கிய ஜமாத்தின்வாழ்த்துக்கள். வல்ல அல்லாஹ் தன்னுடைய அருளைப் பொழிவானாக . ஆமீன்
பதிலளிநீக்குதுஆ செய்யும் அன்பு சகோதரன்
கனியூர் இஸ்மாயில் நாஜி
சிதம்பரம்
இந்திய அரசியல் சட்டத்திற்கும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
பதிலளிநீக்குஇது நாள் வரை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தில் தேர்தலே கிடையாதே!!
சொல்லப் போனால் இது போண்ற ஊர் ஜமாத்களூக்கே இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லையே!!
இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை.
பதிலளிநீக்குSyed
(யூகத்தின் அடிப்படையில்) தொடர்ச்சியாக கருத்துக்கள் வெளிவருவதற்கு முன், வலைப்பூ சார்பாக, தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்களிடம்
பதிலளிநீக்குபேட்டி கண்டு எழுத்தாகவோ அல்லது ஆடியோவாகவோ பேட்டியை
வெளியிட வேண்டுமென்று கேட்டு கொள்கின்றேன்.
இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை .
பதிலளிநீக்குSyed
//இது போண்ற ஊர் ஜமாத்களூக்கே இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லையே!!//
பதிலளிநீக்குஅன்பின் குலாம்,
பொதுவாக ஜமாஅத்கள் ஒரு நற்பணி அமைப்பாக இந்தியப் பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன என்று நினைக்கிறேன். நம் பழைய ஜமாஅத்கள் அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தன.
தேர்தல் நடைமுறை, வாக்கு விபரம் போன்றவற்றை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாமோ என்ற ஒரு சம்சயம் எனக்கிருந்தது. அதை எதிரொலிப்பதாகவே 'வெளிநாடு வாழ் ஊரார் வாக்குரிமை' பற்றிய முடிவு அமைந்திருக்கிறது.
மேலும் இதுகுறித்து தே.ஆ.குழுவில் இடம் வகிப்பவரும், நம் ஆசிரியக்குழு உறுப்பினருமான லி.ஹமீத் மரைக்காயர் தெளிவுபடுத்துவாராக.
இதைப் பற்றி சட்ட நுணுக்கம் பேசினால் மேலும் குழப்பம்தான் ஏற்படும் அதனால் இதை இத்துடன் விட்டு விடுவோம். மேலும் இதை எப்படி சாத்தியப் படுத்துவது என்பது பற்றி என்னுடைய கருத்து.
பதிலளிநீக்குpnojamath@yahoogroups.com ல் அறிமுகப் படுத்தப் பட்ட பரங்கிப் பேட்டையை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் இந்த தேர்தலில் ஓட்டு போட விரும்பும் வெளி நாடு வாழ் பரங்கிப் பேட்டையை சேர்ந்தவர்கள் இதில் பதிவு செய்து கொண்டால், ஒவ்வொருவரிமிருந்தும் வாக்குகளை அவர்களின் மின் அஞ்சலில் இருந்தே வாக்கு பதிவு செய்யலாம். இன்னவர்தான் வாக்கு பதிவு செய்தார் என்று தெளிவாக தெரியும் பட்சத்தில் சட்ட சிக்கல் ஏதுவும் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் பொதுமானவன்.
உண்மை தான் குலாம்.
பதிலளிநீக்குமனமிருந்தால் மார்க்கமுண்டு.
இணைய(Net)வசதியில்லாத சகோதரர்களும் இணைவதற்கு வசதியாக, மின்னஞ்சல் மட்டுமின்றி-முழு முகவரியளிக்கப்படும்-கடித அஞ்சலும் கருத்திலும் வாக்கிலும் எடுக்கப்படலாம் - கால வரையறைக்குட்பட்டு.
தேர்தல் ஆணையம் தான் இனி தங்களை நிலைப்பாட்டையும் நியாயப்'பாட்டை'யும் தெளிவுபடுத்த வேண்டும்.