வியாழன், 19 பிப்ரவரி, 2009

IAS ஏழை முஸ்லிம்களுக்கு இலவசபயிற்சி!

பொருளாதார வசதியற்ற, படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். (IAS), ஐ.பி.எஸ். (IPS), ஐ.எஃப்.எஸ். (IFS) போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற சென்னையில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். (IAS), ஐ.பி.எஸ். (IPS), ஐ.எஃப்.எஸ். (IFS) போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவர்களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்சி., (10-ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும், ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும் சுய விவரக் குறிப்பினை உடனடியாக அனுப்பி விண்ணப் பிக்கலாம்.

முகவரி:
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118/13, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 3.
அலைபேசி (பொதுச் செயலாளர்): 9444165153

நன்றி :
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலைத்தளம் - http://www.muslimleaguetn.com/news.asp?id=640

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக