
மாவட்ட 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 11ம் தேதி நடக்கிறது.
காலை 9 மணிக்கு 14 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வும், 1 மணிக்கு 16 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வும் நடக்கிறது.
தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் வெள்ளை சீருடை அணிந்து வர வேண்டும்.
14 வயதிற்குட்பட்டோர் 95ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அல்லது அதன் பிறகும், 16 வயதிற்குட்பட்டோர் 93ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அல்லது அதன் பிறகு பிறந்திருக்க வேண்டும்.
தேர்விற்கு வருவோர் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது மாவட்டத்திற்குள் படிப்பவராகவோ இருக்க வேண்டும்.
இரண்டு போட்டோ, பிறப்பு சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.
வீரர்கள் தேர்வு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் செயலாளர் கூத்தரசன், இணை செயலாளர்கள் சத்தியமூர்த்தி, நடராஜன் முன்னிலையில் நடக்கிறது.
மேலும் விவரங்களுக்கு... மாவட்ட கிரிக்கெட் சங்கம்-5, ஜட்ஜ் பங்களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 9842309909, 9894116565, 9442521780 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.
பதிவை படிப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது...
பதிலளிநீக்குகடலூர் மஞ்சக்குப்பம் செயிண்ட் ஜோசப்ல தான் படிச்சேன் :)))
பரங்கிப்பேட்டைக்கு சின்ன வயசுல பள்ளியில 5 ரூவா கட்டி டூரிஸ்டு வந்தோம். இரண்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன்.
காந்தி படம் பார்த்தோம். கலங்கரை விளக்கம் போய் அங்கே இருந்து சின்னச்சின்ன சோழி எல்லாம் பொறுக்கினோம். அப்புறம் வாத்தியாருங்க எங்களை ஓட்டிக்கிட்டு வந்து டீ பன்னு வாங்கி கொடுத்து திரும்ப கூட்டி வந்தாங்க..
ஒரே மலரும் நினைவுகள் போங்க