பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் நேற்று விழுப்புரத்தில் வெளியிடப்பட்டது.
லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
கடந்த 3ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாயாவதி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இரண்டாம் கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விழுப்புரத்தில் நேற்று நடந்தக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலர் விஜயன் வெளியிட்டார்.
தொகுதி வாரியாக வேட்பாளர் விவரம் வருமாறு:
தொகுதி வாரியாக வேட்பாளர் விவரம் வருமாறு:
- கிருஷ்ணகிரி-மூர்த்தி,
- சிதம்பரம் (தனி)-ராமலிங்கம்,
- நீலகிரி (தனி) -கிருஷ்ணன்,
- காஞ்சிபுரம் (தனி) - உத்ராபதி,
- திருவண்ணாமலை - கோவிந்தசாமி,
- விழுப்புரம் (தனி) - பொய்யாது (எ) அன்பின் பொய்யாமொழி,
- நாமக்கல் - ஹரிகரசிவம்,
- ஈரோடு - சிவகுமாரி,
- திருப்பூர் - பாலகிருஷ்ணன்,
- கடலூர் - ஆரோக்கியதாஸ்,
- தஞ்சாவூர் - டாக்டர் சரவணன்.
பின் நடந்தக் கூட்டத்தில், விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) தொகுதி வேட்பாளர்களை மாநில பொதுச் செயலர் விஜயன் அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், 'புதுச்சேரி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வரும் 15ம் தேதி வெளியிடப்படும்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக