ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு; பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பெண்கள் கைது

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு
பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பெண்கள் கைது

அருகே சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று விருத்தாசலத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பின்னர் மாலை சொந்த ஊருக்கு செல்ல விருத்தாசலம் கடைவீதியில் நின்று பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருக்கு பின்னால் நின்று பயணம் செய்த 3 பெண்கள் செல்வி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்து அபேஸ் செய்ய முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட செல்வி சத்தம் போட்டார். உறவினர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் அந்த 3 பெண்களிடம் சோதனை நடத்தி அவர்களிடம் இருந்து தங்கசங்கிலியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் உஸ்மான், ஏட்டு குணசேகரன் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பரங்கிப்பேட்டை அருகே மரியாங்குப்பத்தை சேர்ந்த சுந்தரம் மனைவி நிர்மலா (41), மணி மனைவி காமாட்சி (35), ராமச்சந்திரன் மனைவி பிரேமா (45) என்பதும், இவர்கள் அக்காள் - தங்கைகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source : மாலை மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...